ரெப்போ வட்டியில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு
5 Jun 2026, 9:06 pm
<p><strong>ரெப்போ வட்டியில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு</strong></p><p>வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்க ப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. நிதிச்சூழலுக்கு ஏற்ப இந்த வட்டி விகிதத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி ஆலோசிக்கும். அதன்படி 2026-27 நிதி யாண்டுக்காக ஜூன் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா,” ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்ற மில்லை, ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேற்கு ஆசியப் போரால் எரிபொருள், எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான பணவீக்க அபாயங்களை உணர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கா மல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.</p>
