அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
10 Jul 2026, 9:19 pm
<p><strong>அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஈரோடு, ஜூலை 10- அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தி னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தனியார் மயம் என்ற பெயரில் ஐசிடிஎஸ் திட்டத்தை சீர் குலைப்பதை கைவிட வேண்டும். குழந்தைககளின் நலனைக் கருதி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பிற துறை பணிகளில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும். 50 ஆண்டு களை கடந்த ஐசிடிஎஸ் திட்டத்தை தனி துறையாக ஆக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ராதாமணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன், சிஐடியு துணைச்செயலாளர் பி.ஸ்ரீதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஆர்.கவிதா தலைமை ஏற்றார். போராட்டத்தை வாழ்த்தி, சிஐடியு மாவட்ட துணைத்தலை வர்கள் ரத்தினகுமார், என்.ஜாகீர் ஆகியோர் உரையாற்றி னர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில இணைச்செயலாளர் என். சாந்தி நிறைவுரை யாற்றினார்.</p>
