தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களின் குரலாய் மக்கள் சந்திப்பு இயக்கம்

30 Aug 2026, 11:04 pm
மக்களின் குரலாய்  மக்கள் சந்திப்பு இயக்கம்

மக்களின் குரலாய் மக்கள் சந்திப்பு இயக்கம்

“மக்களிடம் செல்... மக்களிடம் கற்றுக்கொள்... மக்களுக்காகப் போராடு!” எனும் மகத்தான முழக்கத்தோடு, தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இந்த சந்திப்பு எளிய மக்களின் நம்பிக்கை ஒளியாக வீதிதோறும் பேரெழுச்சியோடுபயணித்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் நேரத்து வாக்குகளுக்காக மட்டுமே தங்களைத் தேடி வரும் சில அரசியல் இயக்கங்களை பார்த்து சலித்துப்போன மக்கள் ”எங்கள் பிரச்சினைகளை உங்கள் பிரச்சினையாகக் கருதி, எங்களுக்காகக் களம் நின்று போராடி உரிமைகளைப் பெற்றுத் தருவது இந்தச் செங்கொடி இயக்கம் மட்டுமே!” என மக்கள் நெகிழ்ச்சியோடு பகிரும் அன்பான வார்த்தைகள், மக்கள் சந்திப்பு இயக்கத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டாவைக் கையில் வைத்துக்கொண்டு, தங்களின் நிலம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளை ஏறி இறங்கி ஓய்ந்துபோன ஏழை எளிய மக்களின் வேதனைக்கதைகள் ஊர்தோறும் எதிரொலிக்கின்றன. இவற்றைக் கேட்டறிவதோடு நின்றுவிடாமல், களத்தில் நிற்கும் கட்சித் தலைவர்கள் உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, மக்களின் சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஈரோடு தாலுகா நசியனூர் பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. ஈரோடு தாலுகாசெயலாளர் என்.பாலசுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.லலிதா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

நசியனூர் பகுதியில் சாலையோரங்களிலும் மரத்தடிகளிலும் தங்கியுள்ள எளிய குடும்பங்களை சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் பேசுகையில், அப்போது அப்பகுதி மக்கள், தங்களுக்குச் சொந்தமாக ரேஷன் கார்டு இல்லை, குடியிருக்க சொந்த வீடோ, வீட்டுமனையோ இல்லை, 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கு அரசு உதவித்தொகை கிடைக்கவில்லை, தகுதியிருந்தும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை எனத் தங்களின் வாழ்வாதாரப் போராட்டங்களை வேதனையோடு முறையிட்டனர். இதனை குறிப்பெடுத்துக்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர், இப்பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லவும்,தேவையேற்பட்டால் இயக்கத்தை முன்னெடுக்கிறோம் என்கிற உறுதியளித்தனர். இதுபோன்ற சொற்கள் கோரிக்கைகளோடு நிற்கிற உழைப்பாளி மக்களின் கண்களிள் நம்பிக்கை வெளிச்சத்தை பார்க்க முடிந்தது.

இதேபோன்று, புன்செய் புளியம்பட்டி நகரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம் பங்கேற்றார். இதேபோல, பவானி தாலுக்கா சுக்காநாயக்கனூர், நல்லாக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் பிபி.பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று மக்கள் கருத்தை அறிந்தனர்.

அடிமட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசு அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவற்றுக்கான தீர்வைப்பெற்றுத்தரும் வரை ஓயாது போராடுவது எனத் தலைவர்களும் தோழர்களும் உறுதிபூண்டனர். மக்களுடனான இந்த நெருக்கமான பிணைப்பும், அவர்களின் துயரத்தைத் தீர்க்கும் களப்போராட்டமுமே செங்கொடி இயக்கத்தின் உண்மையான பலம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.