விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
4 Nov 2026, 1:19 am

விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஎம் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகாகுழு சார்பில் மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் எஸ். கிட்டு தலைமை தாங்கினார்.

திமிரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆற்காடு தாலுகா செயலாளர் ஜி. மதியழகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் சிபிஎம் மூத்த தோழர் டி. சந்திரன், மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, தவிச மாவட்ட செயலாளர் ஆர். மோகன்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். வெங்கடேசன் மற்றும் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.பி.எம். சீனிவாசன், கே. ரவிச்சந்திரன் உள்ளிட்ட தாலுகா குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிபிஎம் செங்கல்பட்டு பகுதி குழுவின் சார்பில் ராட்டினம் கிணறு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுதி குழு உறுப்பினர் மு. முனி செல்வம் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் .இ.சங்கர், பகுதி செயலாளர் கே வேலன் பகுதி குழு உறுப்பினர் என் அன்பு உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.