ஆத்தூர் பகுதியில் கொத்தவரங்காய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
27 Apr 2026, 1:06 am
<p><strong>ஆத்தூர் பகுதியில் கொத்தவரங்காய் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்</strong></p><p>திண்டுக்கல், ஏப்.26- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொத்த வரங்காய் சாகுபடியில் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக ஆர்வத்து டன் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொத்தவரங்காய் (சீனி அவரை) சிறு செடிவகை காய்கறி பயிராகும். இதன் காய்கள் கொத்தாக வளர்வது இதன் முக்கிய தன்மையாகும். குறைந்த பராமரிப்பில் வளரக்கூடியது, 45 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு வரும். 40 நாட்களிலேயே மகசூல் கிடைக்கத் தொடங்கும். இதனால் விவசாயிகள் இதனை விரும்பி சாகுபடி செய்கின்றனர். கொத்தவரை விதையிலிருந்து பெறப்படும் கார் பிசின் உணவுத் தயாரிப்பு தொழில் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் முக்கிய சேர்க்கைப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது ஏற்றுமதி பணப்பயிராகவும் முக்கியத்து வம் பெறுகிறது. குறிப்பாக, நார்ச்சத்து, பொட்டாசியம் – இதய ஆரோக்கி யத்திற்கு உதவும், இரும்பு, சுண்ணாம்பு – கர்ப்பிணிகளுக்கு பயனுள்ளது. கிளைகோ நியூட்ரியன்ட்ஸ் – இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, போலிக் அமி லம் – குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியம் என்று கொத்தவரங்காய் பல் வேறு சத்துக்களை கொண்டுள்ளது. உழவர் சந்தையில் கிலோ ரூ.50, சில்லரை கடைகளில் கிலோ ரூ.70 வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், “நல்ல விளைச்சல் கிடைத்தாலும், கட்டுப்படியான விலை கிடைக்க வில்லை. அதனால் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ள னர். சரியான விலை மற்றும் சந்தை ஆதரவு கிடைத்தால், கொத்தவரங் காய் சாகுபடி மேலும் விரிவடையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக் கின்றனர்.</p>
