தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

29 Oct 2026, 12:40 am
நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

ஈரோடு, அக்.28-நிலுவையிலுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் புதனன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த முறைகளை கைவிட்டு, நிரந்தர பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதனன்று மாநிலம் முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தர்ணாவிற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். இதில், தொழிற்பயற்சிஅலுவலர் சங்க மாநிலத் தலைவர் மு.சீனிவாசன் துவக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். செவிலியர் மேம்பாட்டு சங்க மாநிலத் தலைவர்ஜி.சசிகலா நிறைவுரையாற்றினார். முடிவில், மாவட்டப் பொருளாளர் ஆர்.சுமதி நன்றி கூறினார்.

கோவை

கோவை சிவானந்தா காலனிபகுதியில் நடைபெற்ற தர்ணாவிற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.செந்தில்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருணகிரி, சிஐடியு மாவட்ட நிர்வாகி கே.ரத்தினகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் கமலஹாசன் நிறைவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் டி.ஏ.குணசேகரன் நன்றி கூறினார்.

தருமபுரி

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமையில் தர்ணா நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணா குபேரன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர்ஏ.தெய்வானை, பொருளாளர் ஆர்.ஜெயவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கமாநில துணைத்தலைவர் ச.இளங்குமரன், நில அளவை அலுவலர்ஒன்றிப்பின்மாவட்டத் தலைவர் பி.பிரபு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியுமாநில துணைத்தலைவர் சி.நாகராசன் நிறைவுரையாற்றினார்.

சேலம்

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தர்ணாவிற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெ.அர்த்தனாரி தலைமை வகித்தார்.இதில், மாநில துணை பொதுச்செயலாளர் கே.மகாலிங்கம், மாவட்டச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் சண்முகம், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் ஜான் ஆஸ்டின்,கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.