கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி
25 May 2026, 8:51 pm

கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி

முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னை, மே 25 - கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை தள்ளு படி செய்ய தமிழ்நாடு முத லமைச்சர் விஜய் உத்தர விட்டுள்ளார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், கூட்டு றவுத்துறை அமைச்சர் காந்தி ராஜ், நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோருடன், முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, பயிர்க்கடன் தள்ளுபடி அறி விப்பு வெளியாகியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி யின் வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழக அரசின் தற்போதைய நிதிநிலையை கருத்தில் கொண்டு, 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கி களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களுக்கு தள்ளு படி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, ரூ. 50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி வழங்கப்படு கிறது. ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ. 40 ஆயிரம், ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ. 30 ஆயிரம், ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ. 20 ஆயிரம், ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 90 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும். ரூ. 1 லட்சத் திற்கும் மேல் கடன் பெற்ற வர்களுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும், கூட்டுறவு வங்கி கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற பெரு விவசாயி களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் 14 லட்சத்து 22 ஆயிரத்து 555 விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும், இத னால் அரசுக்கு ரூ. 2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.