காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக! முதலமைச்சர் விஜய்யிடம் சிபிஎம், சிபிஐ தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்
1 Jul 2026, 10:31 pm

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக! முதலமைச்சர் விஜய்யிடம் சிபிஎம், சிபிஐ தலைவர்கள் நேரில் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 1 - காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இரு வேறு கருத்து வேறுபாடுகளைக் களைந்து மீண்டும் ஒருமித்த கருத்தை உருவாக்க, அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை உடனடி யாகக் கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்

தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் ஆகிய தலைவர்கள் அளித்த பேட்டி வரு மாறு:

காவிரி விவகாரத்தில் ஒருமித்த கருத்து அவசியம்

தமிழக வரலாற்றிலேயே காவிரிப் பிரச்சினையில் பல்வேறு கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களுக்கு இடையே கருத்து வேறு பாடு ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் பல விவ காரங்களில் முரண்பாடுகள் இருந்தபோதிலும், காவிரிப் பிரச்சினையில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒரே குரலில்தான் ஒலித்து வந்தது.

தற்போதைய சூழல் மாநில நலனுக்கு உகந்தது அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்தில் திடீரென தீர்மானம் கொண்டு வரப்பட்டு, மேகதாட்டு அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதே இந்த இருவேறு கருத்து கள் உருவாகக் காரணமாகிவிட்டது. இதுபோன்ற தீர்மானங் களைச் சட்டமன்றத்தில் கொண்டுவருவதற்கு முன்பாக, வழக்க மாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிறகே அரசு தனது நிலைப்பாட்டை வெளியிடு வது மரபு.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இப்போது ஏற்பட்டு உள்ள பிளவைத் தவிர்த்து, அரசு எந்த அடிப்படையில் இந்த முடி வுக்கு வந்தது என்பதை விளக்குவதற்கும், ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும் அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங் களின் கூட்டத்தை அரசு உடனடியாக நடத்த வேண்டும். இதனை முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம், அவரும் இதனை ஏற்றுக்கொண்டு விரைவில் கூட்டத்தைக் கூட்டுவார் என நம்பு கிறோம்.

வேலையின்மை ஒழிப்பு, கல்வித்துறை பணியிடங்கள்

தற்போது தமிழ்நாட்டில் வேலையின்மை மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்குவதோடு, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருப்பதால் கல்வித் தரம் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

ஆசிரியர் தேர்வாணையம் (TRB) ஏற்கனவே நடத்திய தேர்வு களில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக அரசு உடனடியாகத் தலையிட்டு, தேர்வு எழுதியவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். மக்களின் இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப் படவுள்ள நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அமைய வேண்டும் என்பதை முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

சிங்கப்பெண் அதிரடிப் படை மற்றும் தொழிலாளர் சட்டங்கள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடு மைகளைத் தடுப்பதற்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ அமைக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த அதிரடிப் படையில் ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றி வந்த பெண் காவலர்களே மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் பாலின சமத்துவம் போன்ற கருத்துகளை முழுமை யாக உள்வாங்கிச் செயல்படும் வகையில் தமிழ்நாடு அரசு அவர் களுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளோம்.

அதேபோல், ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள தொழி லாளர் நலனுக்கு எதிரான நான்கு தொகுப்புச் சட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அப்படியே பின்பற்றக் கூடாது. இச்சட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்போது தமிழ் நாட்டின் அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து ஆலோசிக்க வேண்டும். கேரளா அரசு ஏற்கனவே நீதிபதி கோபால் கவுடா தலைமையில் அமைத்த குழுவின் பரிந்துரைகளைப் பெற்று, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மட்டுமே விதிகளை உருவாக்க வேண்டும் என வற்புறுத்தினோம். இக்கோரிக்கைகளை முதலமைச்சர் பரி சீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்க!

தூய்மைப் பணியில் மீண்டும் தனியார்மயத்தை ஈடுபடுத்தும் அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்த நிலையில், எங்களது கடு மையான வற்புறுத்தலைத் தொடர்ந்து அந்த அறிவிப்பை முதல மைச்சர் திரும்பப் பெற்றுக்கொண்டதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், தூய்மைப் பணி தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும், மற்ற துறைகளி லும் நிலவும் ஒப்பந்த முறையை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதும் எங்களின் முக்கியக் கோரிக் கையாகும்.

ஆதரவு தொடரும்; ஆட்சி நீடிக்கும்

தமிழக வெற்றிக் கழக அரசின் கூட்டணியில் இடம்பெற்றி ருக்கும் கட்சிகளுக்கான தேநீர் விருந்து நிகழ்வாக அது இருந்த தால், சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இடதுசாரிக் கட்சிகள் அதில் கலந்துகொள்ளவில்லை. எனினும், அந்த நிகழ்விற்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஊடகங்கள் சொல்வது போல இது புதிய கூட்டணி அமைப்பதற்கான சந்திப்பு அல்ல. எங்களோடு பேசிய முதலமைச்சரோ அல்லது அமைச் சர்களோ அது குறித்து எதுவும் பேசவில்லை.

நாங்கள் தற்போதும் இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம், அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த அரசு நிச்சயமாக ஐந்து ஆண்டு காலம் முழுமையாக நீடிக்கும். ‘அடுத்த சில மாதங்களில் தேர்தல் வரும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கும் கருத்து ஏற்புடையது அல்ல.

இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கி யுள்ளோம்; அதன் சார்பில் தமிழ்நாட்டில் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கான களப் போராட்டங்கள் தொடர்ந்து தொய் வின்றி நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.