தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புரட்சியாளர் சேகுவேரா பிறந்தநாள் கொண்டாட்டம்

15 Jun 2026, 12:34 am
புரட்சியாளர் சேகுவேரா பிறந்தநாள் கொண்டாட்டம்
<p><strong>புரட்சியாளர் சேகுவேரா பிறந்தநாள் கொண்டாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூன் 14- உலக இளைஞர்களிள் எழுச்சி நாயகனான தோழர் சேகுவேராவின் பிறந்தநாள் ஞாயிறன்று கொண்டாடப் பட்டது புரட்சியாளார் சேகுவேரா பிறந்த நாள் கூட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி முத்து இல்லத் தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு, வட்டச் செயலாளர் பி.காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செய லாளர் இரா.சிசுபாலன், மூத்த தலை வர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, சோ.அருச் சுனன், வே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலாளர் கே.கோவிந்தசாமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச் சந்திரன், ஆர்.சின்னசாமி, என்.கந்த சாமி, எம்.அருள் குமார், கே.எல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்ன தாக, சேகுவேரா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இந்நிகழ்வில், டி.ரவீந்திரன் பேசு கையில், அடக்குமுறை, ஒடுக்குமுறை எங்கெல்லாம் தலைவிரித்தாடுகிறதோ, அதை எதிர்க்க வேண்டும் என்கின்ற உணர்வு தான் சேகுவேரா. சமூக விடுதலைக்கு மார்க்சியம் வழிகாட்டி யது. நாம் வாழ்கின்ற பகுதியில் அடக்கு முறைக்கு எதிராக நாம் போராட வேண் டும். அந்த போராட்டங்களுக்கு சேகு வேரா உத்வேகம் அளிக்கிறார். இன்று உலகம் முழுவதும் ஏகாதிபத்தியத் திற்கு எதிராக சோசலிசம் சவால் விடு கிறது. பல நாடுகளில் போர். குறிப் பாக, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர். ஈரான் மீது தாக்கு தல் நடத்தி, ஈரான் நாட்டு அதிபர் கோமேனியை படுகொலை செய்துள்ள னர். வெனிசுலா இடதுசாரி அரசாங்கத் தின் அதிபர் மதுரோ குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். கியூபா நாட்டின் மீது அமெரிக்கா பொருளா தார தடை விதிக்கிறது. சோசலிச நாடு களை அழிப்பது தான் அமெரிக்காவின் வேலை. ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி சேகுவேரா அவருடைய பிறந்த தினத் தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.