தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழு தள்ளுபடி! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

17 Aug 2026, 8:55 pm
ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழு தள்ளுபடி! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழு தள்ளுபடி! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

சென்னை, ஆக. 17 -தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண்: 110-ன் கீழ் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட் டார். அதில், ரூபாய் 75,000 வரை பயிர்க்கடன்பெற்றுள்ள விவசாயி களுக்கு அந்தத் தொகை முழுமையாகவும், ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் கடன்பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 35,000 வரையும் தள்ளுபடி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

கடந்த கால நடவடிக்கைகள்

பதவியேற்ற 15 நாட்களுக்குள், கடந்த மே 25 அன்று குறு, சிறு மற்றும் இதரவிவசாயிகளுக்கு ரூபாய்50 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ஆணை பிறப்பிக்கப்பட்ட தை முதல்வர் நினைவுகூர்ந் தார். தொடர்ந்து, விவசாயி கள் அமைப்புகளின் கோரிக்கைகளை பரிசீலித்து, ஜூன் 19 அன்று இத்தொகை உயர்த்தப்பட்டு, 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய்5,932.23 கோடி அளவிலான கடன் தள்ளுபடி அறிவிக்கப் பட்டது. இதில் ஜூலை 31 வரை ரூபாய் 5,267 கோடி, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

புதிய அறிவிப்பின் விவரங்கள்

இந்நிலையில், ஆகஸ்ட் 7 அன்று விவசாயி கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எழுப்பப் பட்ட கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ரூபாய் 75,000 முதல் 1 லட்சம் வரை கடன் பெற்ற 2,38,264 விவசாயிகளுக்கு தலா ரூபாய் 75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முன்னர் பெற்ற தொகைக்கு மேலாக ரூபாய் 40,000 வரை கூடுதலாகப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

நிதிச்சுமை குறித்த விளக்கம்

இந்திய ரிசர்வ் வங்கியின் 2025 நவம்பர் 28-ஆம்தேதியிட்ட வழிகாட்டுத லின்படி, கடன் தள்ளுபடி தொகையை 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்குமுழுமையாக செலுத்த வேண்டும் என்ற நடைமுறையையும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.இந்த கூடுதல் தள்ளு படியால் அரசுக்கு சுமார் ரூபாய் 953.06 கோடி கூடுதல்நிதிச்சுமை ஏற்படும். எனினும், மொத்தமாக 13.34 லட்சம் விவசாயி களுக்கு ரூபாய் 6,220 கோடிபயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குவதாக முதல்வர் உறுதிபடக் கூறி னார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.