தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்திடுக! சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

1 Oct 2026, 11:16 pm
தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்திடுக! சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்திடுக! சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தேனி, அக்.1-

வாக்காளர் பட்டியலிலிருந்து 13 கோடி வாக்காளர்களை நீக்கி ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் சார்பில் வியாழனன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ(எம்-எல்) மாநிலக்குழு உறுப்பினர் மு.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.இராமச் சந்திரன், சிபிஐ தேனி மாவட்டச் செயலாளர் கே.பெருமாள் ஆகியோர் உரையாற்றினர். எஸ்.யு.சி.ஐ மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி, சிபிஎம் மூத்த தலைவர் கே.ராஜப்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், டி.கண் ணன், ஜி.எம்.நாகராஜன், சு.வெண்மணி, கே.ஆர்.லெனின், இ.தர்மர், சி.முனீஸ்வரன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்குமார், கல்யாணசுந்தரம், சிபிஐ(எம்எல்) மாவட்டநிர்வாகிகள் பாண்டிகுமார், உஷ்மான் அலி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை

மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன் தலைமை வகித்தார். சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி தொடங்கி வைத்து பேசினார்.சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சாமி, சிபிஐ(எம்.எல்.) சார்பில் சண்முகம், எஸ்யுசிஐ சார்பில் மாவட்டச் செயலாளர் வால்டர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

விருதுநகர்

விருதுநகர் மூளிப்பட்டி அரண் மனை அருகே நடைபெற்ற இப் போராட்டத்திற்கு சிபிஎம் நகர் செயலாளர் எம்.ஜெயபாரத், சிபிஐ(எம்.எல்.) சார்பில் ஜவஹர் ஆகியோர் ஆகியோர் தலைமை தாங்கினர். துவக்கி வைத்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி பேசினார். கோரிக்கைகளை விளக்கி சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் க.சமுத்திரம், செய்யது ஆகியோர் பேசினர். சிபிஎம்மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.முத்துக்குமார், வி.முருகன், எம்.சுந்தரபாண்டியன், எல்.முருகன், பி.மாரியப்பன், எஸ்.லட்சுமி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல், சிபிஐ மாவட்ட செயலாளர் என்.எஸ்.பெருமாள் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நா.கலையரசன், வி.காசிநாததுரை, எம்.சிவாஜி, வி.மயில்வாகணன், எம்.ராஜ்குமார், இ.கண்ணகி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.கே.ராஜன், மாவட்ட தலைவர் எஸ்.பி.ராதா, சிபிஎம் இராமநாதபுரம் தாலுகாச் செயலா

ளர் என்.வெங்கடேஸ், கீழக்கரை தாலுகாச் செயலாளர் எஸ்.முருகேசன், பரமக்குடி வட்டாரச் செயலாளர் இ.க.தட்சிணாமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், வி.முருகன், பி.கல்யாணசுந்தரம், சிபிஐ இராமநாதபுரம் நகரச் செயலாளர் பி.ராஜேந்திரன், இராமேஸ்வரம் நகரச் செயலாளர் சி.ஆர்.செந்தில் வேல்ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் நிறைவுரையாற்றினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வெள்ளைச்சாமி, சிபிஐ(எம்எல்) விடுதலை சார்பாக முருகேசன் ஆகியோர்தலைமை வகித்தனர். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராணி, சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ராஜாமணி, சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

சிவகங்கை

சிவகங்கை அரண்மனை வாசலில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஐயைச் சேர்ந்தவருமான குணசேகரன், மாவட்டச் செயலாளர் சாத்தையா, மார்க் சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, நாராயணன் உள்ளிட்டோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.