திருத்தங்கல்லில் தமுஎகச சார்பில் 9 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா
17 Jan 2026, 2:42 pm
<p><strong>திருத்தங்கல்லில் தமுஎகச சார்பில் 9 ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா</strong></p>
<p>சிவகாசி, ஜன.17- சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் லில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 9ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிளைத் தலைவர் எம். முத்துச்சாமி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பி.எம்.பெரியநாயகம் வர வேற்புரையாற்றினார். மாவட்ட பொருளா ளர் சசிரேகா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி யை துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் பெ.ரவீந்திரன் பேசினார். மருத்துவர்கள் தங்கவேல், சுப்பாராஜ், நந்தன் கனகராஜ், ஆசிரியை கஸ்தூரி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பி னர் ச.தமிழ்செல்வன், ஆற்று மெய்யியல் உரையாடல் மையத்தின் ஒருங்கிணைப்பா ளர் சிவ.கதிரவன் ஆகியோர் கருத்துரை யாற்றினர். இவ்விழாவில், ஓவியம், கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்றது. முடி வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 50 வயதில் உலக அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற சிவகாசியைச் சேர்ந்த பாண்டிமா தேவியை தமுஎகச தலைவர்கள் கௌரவித் தனர். பிரேமலதா நன்றி கூறினார்.</p>
