சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் விஐடி பேராசிரியர்கள் 99 பேர் சாதனை வேந்தர் கோ.விசுவநாதன் பெருமிதம்
4 Nov 2026, 8:49 pm

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் விஐடி பேராசிரியர்கள் 99 பேர் சாதனை வேந்தர் கோ.விசுவநாதன் பெருமிதம்

வேலூர், நவ. 4-ஸ்டான்போர்ட்-எல்சேவியர் வெளி யிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 99 பேராசிரியர்கள் இடம் பிடித்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளனர்.

செய்தியாளர்களிடம் இதனைத் தெரி வித்த விஐடி வேந்தர் முனைவர் கல்விக்கோ கோ.விசுவநாதன், நடப்பாண்டில் பல்கலைக் கழக வரலாற்றிலேயே முதல்முறையாக மாணவர் ஒருவர் ரூ.1.45 கோடி அதிகபட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள தாகவும், 4 வளாகங்களிலும் சேர்த்து மொத்தம் 12,329 வேலைவாய்ப்பு ஆணை கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கியூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசையில் உலகளவில் 597வது இடத்தையும், நிலைத்தன்மை பிரிவில் இந்தியாவில் 7-வது இடத்தையும், பொறி யியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் இந்தியாவில் 6-வது இடத்தையும் விஐடி பிடித்துள்ளது. என்ஐ ஆர்எஃப் (NIRF) தரவரிசை

யில் சிறந்த பல்கலைக்கழகங்களில் 14-வது இடத்தை யும், ஒட்டுமொத்த பிரிவில் 21-வது இடத்தையும் பெற்றுள்ளது.

கிராமப்புற அரசு பள்ளி மாணவர் களுக்கான ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் கீழ் 1,200 மாணவர்களுக்கு ரூ.103 கோடி மதிப்பில் இலவச உயர்கல்வியும், ‘அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை’ மூலம் 11,158 மாணவர்களுக்கு ரூ.14.24 கோடி நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இச்சந்திப்பின் போது துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.