தீக்கதிர் முக்கிய செய்திகள்
2 Dec 2025, 4:11 pm

கரூர் சம்பவம்: உச்சநீதிமன்ற நீதிபதி குழு விசாரணை

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையிலான மேற்பார்வை குழுவினர் திங்கள்கிழமை கரூருக்கு வருகை தந்தனர். கோவை விமான நிலையத்திலிருந்து வந்த குழுவினர் ஏற்கனவே விசாரணையில் ஈடுபட்டிருந்த சிபிஐ அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்தினர். உயிரிழந்த மற்றும் காய மடைந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசா ரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டிஐஜி அதுல்குமார் தாகூர் திங்கள்கிழமை கரூரில் சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் சம்பவம் நடை பெற்ற வேலுச்சாமிபுரத்திற்கு சென்று ஆய்வு செய்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் மற்றும் கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி தலைமையி லான குழுவினரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 9.86 லட்சம் பேர் பயன்

சென்னை, டிச.2 - நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் செயல் பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். முகாம்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீர், இருக்கை வசதி கள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து தரப்படுவதை உறுதி செய்திட வேண்டும். வழிகாட்டுதல் வழங்க போது மான அளவு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார். முகாம்கள் நடைபெறுவது குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு தனியாக அறை ஏற்படுத் திட வேண்டும். முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாநி லம் முழுவதும் இதுவரை 632 முகாம்கள் நடத்தப்பட்டு 9,86,732 பேர் பயனடைந்து உள்ளனர்.

ரூ.302 கோடி வருமானம்

சென்னை: தமிழக அரசின் பத்திரப் பதிவு துறை, அரசுக்கு வரு வாய் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிக் கிறது. பத்திரப் பதிவுத் துறை வரலாற்றில் இது வரை இல்லாத அள வாக டிசம்பர் 1 ஆம் தேதி ஒரேநாளில் ரூ.302 கோடி வருவாய் ஈட்டி பதிவுத் துறை சாதனை படைத்து உள்ளது.

திமுக எம்எல்ஏ மீதான வழக்கு ரத்து

சென்னை: இராம நாதபுரம் மாவட்டம், முது குளத்தூர் திமுக எம்எல்ஏ முருகேசன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது வாக் காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக பதியப்பட்ட வழக்கு இது. முதுகுளத்தூர் தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிட்டு முருகே சன் வெற்றி பெற்றிருந் தார்.

தினத்தந்தி ஆசிரியருக்கு விருது

சென்னை: 2024 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை, 50 ஆண்டுகளாக இதழி யல் துறையில் பணி யாற்றி நிறைந்த அனு பவம் பெற்றுள்ள தினத் தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர். சுகுமாருக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

சென்னை: அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழ கத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு உள்ளது. தற்போது வட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பவுன்சர்களை தனது பாதுகாப்புக்காக நியமித்துள்ளார்.