தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோள்பட்டை தசைநாண் பாதிப்பு 97 வயது முதியர் விழித்திருக்கும் நிலையில் அறுவை சிகிச்சை

21 Jul 2026, 11:47 pm
தோள்பட்டை தசைநாண் பாதிப்பு 97 வயது முதியர் விழித்திருக்கும் நிலையில் அறுவை சிகிச்சை
<p><strong>தோள்பட்டை தசைநாண் பாதிப்பு 97 வயது முதியர் விழித்திருக்கும் நிலையில் அறுவை சிகிச்சை </strong></p><p>சென்னை, ஜூலை 21- சென்னை குரோம்பேட்டையி லுள்ள ரேலா மருத்துவமனையில், கீழே விழுந்து தோள்பட்டை தசை நாண் கடுமையாக பாதிக்கப்பட்ட 97 வயது முதியவருக்கு ‘பயோ-பலூன்’ தொழில்நுட்பத்தின் மூலம் வெற்றிகரமாக நுண்துளை அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. உடலில் மக்கும் தன்மை கொண்ட அந்தபலூன் தசைநாணை இலகு வாக்கியது. முதியவரின் வயது மற்றும் பலவீனமான இதய நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்குப் பொது மயக்க மருந்து வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட நரம்புப் பகுதியை மட்டும் மரத்துப்போகச் செய்து அவர் முழு விழிப்புடன் இருக்கும்போதே சிகிச்சை அளிக்கப்பட்டது என்று மூட்டு மாற்றுப் பிரிவு தலைவர் டாக்டர் அசோக் எஸ். கவாஸ்கர் கூறினார். எலும்புகள் உராயாமல் தடுத்து வலியைப் போக்கும் இந்த சிறப்பு பலூன், உடலிலேயே இயற்கையாகக் கரைந்துவிடும் என்பதால், நிரந்தர உலோகம் எதுவும் உடலுக்குள் பொருத்தப்படவில்லை என்று எலும்பியல் நிபுணர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை தெரிவித்தார். துல்லியமான இச்சிகிச்சைக்குப் பின், முதியவர் இரண்டே நாட்களில் நலமுடன் வீடு திரும்பினார். மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா கூறினார். வயது முதிர்வைக் காரணம் காட்டி தோள்பட்டை வலியைப் பொறுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும், நவீன மருத்துவத் தொழில்நுட்பம் மூலம் முதியவர்களுக்கும் பாதுகாப்பாகச் சிகிச்சை அளிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.