நெமிலியில் பழங்குடியினருக்கு 97 வீடுகள் பிர்சா முண்டா நினைவாக சிறப்பு கிராம சபை
15 Nov 2025, 4:09 pm
<p><strong>நெமிலியில் பழங்குடியினருக்கு 97 வீடுகள் பிர்சா முண்டா நினைவாக சிறப்பு கிராம சபை</strong></p>
<p>ராணிப்பேட்டை, நவ. 15 – நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளில் (சித்தூர், அரிகில பாடி, சித்தேரி, காட்டுப்பாக்கம், கீழ்வெங்கடா புரம், மேல்களத்தூர், நெல்வாய், ஓச்சலம், பரமேஸ்வரமங்கலம், பருத்திபுத்தூர், பின்னாவரம், சிறுணமல்லி, உளியநல்லூர்), பிஎம் - ஜென்மம் திட்டத்தின் கீழ் பழங்குடி யின மக்களுக்காக மொத்தம் 97 வீடுகள் கட்டி முடிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் 22 வீடுகளும், 2024-25 நிதியாண்டில் 75 வீடுகளும், மொத்தம் ரூ. 4 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் (ஒரு வீடு ரூ. 5.07 லட்சம் மதிப்பீட்டில்) கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு கள் கட்டும் பணிகள் விரைவாக நடை பெற்று வருகின்றன. பிர்சா முண்டா மற்றும் பழங்குடியின வீரர்களின் தியாகங்களை நினைவு கூரும் விதமாக, சனிக்கிழமையன்று, இந்த 13 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தச் “ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ்” தினத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இக்கூட்டங்களின் ஒரு பகுதியாக, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சித்தூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ. வடிவேலு அவர்கள் முடிவுற்ற வீடு களுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
