முந்தய பக்கம்

96.65 சதவிகித எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்

25 Nov 2025, 3:29 pm
96.65 சதவிகித எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்
<p><strong>96.65 சதவிகித எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்</strong></p> <p>சென்னை, நவ. 25- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டமாக 12 &nbsp;மாநிலங்கள் மற்றும் யூனியன் &nbsp;பிரதேசங்களில் 99.16 சதவிகித விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 96.65 சதவிகித எஸ்.ஐ.ஆர். படிவங் களும், மேற்கு வங்கத்தில் 99.77 சதவிகித படிவங்களும், &nbsp;மத்தியப் பிரதேசத்தில் 99.85 சதவிகிதப் படிவங்களும் விநியோ கம் செய்யப்பட்டுள்ளன. கோவா மற்றும் லட்சத்தீவில் 100 &nbsp;சதவிகிதம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. படிவங்கள் பதிவேற்றத்தில் தமிழ்நாட்டில் 58.70 சதவிகி தம் கணக்கெடுப்பு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. ராஜஸ்தானில் 78.39 சதவிகித படிவங்களும், மத்தியப் பிரதேசத்தில் 72.73 சதவிகித படிவங்களும் பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram