முந்தய பக்கம்

இலங்கைக்கு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள்!

6 Dec 2025, 2:48 pm
இலங்கைக்கு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள்!
<p><strong>இலங்கைக்கு 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள்!&nbsp;</strong></p> <p>சென்னை, டிச. 6 - டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்க ளுக்கு உதவிடும் வகையில், தமிழ் நாட்டு மக்களின் சார்பில், 950 &nbsp;மெட்ரிக் டன் நிவாரணப் பொருட் களை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் இந்திய கடற்படைக்கு சொந்த மான கப்பல்கள் மூலம் அனுப்பி வைத்தார். சென்னை துறைமுகத்திலிருந்து 650 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் &nbsp;டன்னும் என மொத்தம் 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வில், தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப் பப்படும் நிவாரணப் பொருட்களின் மாதிரி தொகுப்பினை இலங்கை துணைத் தூதர் டாக்டர் கணேசநா தன் கீதீஸ்வரனிடம் முதல்வர் வழங்கினார். சென்னை துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன் சர்க்கரை, 300 மெட்ரிக் டன் பருப்பு, 25 மெட்ரிக் டன் &nbsp;பால்பவுடர், 25 மெட்ரிக் டன் கொண்ட &nbsp;5000 வேட்டிகள், 5000 சேலைகள், 10,000 துண்டுகள், 10,000 போர்வை கள் மற்றும் 1000 தார்பாலீன்கள் ஆகிய நிவாரணப் பொருட்களும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 150 மெட்ரிக் டன் சர்க்கரை, 150 மெட்ரிக் டன் பருப்பு உள்ளடக்கிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணையம், கைத்தறி துறை மற்றும் வேளாண்மை &nbsp;- உழவர் நலத்துறை ஆகிய துறை கள் ஒருங்கிணைந்து மேற்கொண் டன.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram