ரூ.930 கோடி காவிரி குடிநீர்த் திட்டம், வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படும்!
12 Apr 2026, 5:30 am

ரூ.930 கோடி காவிரி குடிநீர்த் திட்டம், வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படும்!

அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி. ஒட்டன்சத்திரம், ஏப்.11- ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும் - அமைச்சருமான அர. சக்கரபாணி, புதூர், தேவதானூர், கொத்தையம், போளுவப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஐந்தாண்டு வளர்ச்சிப் பணிகள். அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை விரிவாக எடுத்துரைத்தார்.

ரூ. 930 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம், ரூ. 22 கோடி மதிப்பிலான விருப்பாச்சி அறிமுகக் கல்லூரி, ரூ. 6 கோடி மதிப்பிலான ஒட்டன்சத்திரம் புதிய அரசு தொழிற்பயிற்பி நிலையம் ஆகியவற்றை ஆட்சியின் சாதனைகளாக முன்வைத்தார். தொகுதியில் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்த பல்வேறு திட்டங்களையும் அவர் நினைவுபடுத்தினார்.

இதுவரை நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி தொடர வேண்டுமெனில், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.