தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

31 Dec 2025, 3:37 pm
கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போதைத்தடுப்பு மறுவாழ்வு மையத்தில் ஓர் ஆண்டில் 9004 பேருக்கு சிகிச்சை

திருப்பூர், டிச. 31 – திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் செயல்பட்டு வரும் குடி போதைத் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத் தில் ஓராண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 4 பேர்  சிகிச்சை பெற்றுள்ளதாக ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர்  வரை ஆல்கஹால், ஒபியாய்ட், கன்னாபிஸ்  மற்றும் புகையிலைப் பொருட்களால் பாதிக் கப்பட்ட 7941 பேர் வெளி நோயாளிகளாகவும், 1063 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.  இவர்களில் 687  பேர் வெளிநோயாளிகளாகவும், 85 பேர்  உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று,  கடந்த மாதத்தில் குணமடைந்து சென்றுள்ள னர். எனவே, போதைப் பழக்கத்திற்கு உள்ளா னோரை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப் படுத்த திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள குடி போதைத் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை அணுகி சிகிச்சை பெறுமாறு ஆட் சியர் மனிஷ் நாரணவரே கூறியுள்ளார்.

ஒரு மாதமான பெண் குழந்தை தத்து வள மையத்தில் ஒப்படைப்பு

திருப்பூர், டிச.31 – திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலை யில் இருந்த 31 நாட்கள் ஆன பெண் குழந்தை,  மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தை குறித்து  உரிமம் கோருவோர் உரிய ஆவணங்க ளுடன் 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பெண் குழந்தையை மீட்டு குழந் தைகள் நலக்குழுவில் ஆஜர்ப்படுத்தி சிறப்புத் தத்து வள மையத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளது. எனவே இந்த பெண் குழந்தை குறித்து  உரிமம் கோருவோர் உரிய ஆவணங்களு டன் 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள்  பாதுகாப்பு அலகு, 7ஆவது தளம், அறை  எண் 705, மாவட்ட ஆட்சியரகம், திருப்பூர். தொலைபேசி எண் 0421 2971198, 6382614772  ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ள லாம். யாரும் தொடர்பு கொள்ளாதபட்சத்தில் இக்குழந்தைக்கு பெற்றோர் இல்லை எனக் கருதி சட்டப்படி தத்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.