நெய்வாசல் ஜல்லிக்கட்டில் 9 பேர் காயம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>நெய்வாசல் ஜல்லிக்கட்டில் 9 பேர் காயம்</strong></p>
<p>புதுக்கோட்டை, பிப்.17- திருமயம் அருகேயுள்ள நெய்வாசலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 9 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நெய்வாசல் கிராமத்தில் உள்ள திட்டாணி அய்யனார்கோவில் சிவராத்திரி திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த 139 காளைகள் பங்கேற்றன. நெய்வாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 64 மாடுபிடி வீரர்கள் காளைகளைத் தழுவ முயற்சித்தனர். புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா தொடங்கி வைத்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராமசுப்புராம், பி.கே. வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போட்டியி்ல், 4 மாடுபிடி வீரர்களும், 5 பார்வையாளர்களும் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 8 பேருக்கும் ஜல்லிக்கட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. திருமயம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.</p>
