இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.9 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 பேர் கைது
22 Feb 2026, 3:26 pm
<p><strong>இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.9 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 பேர் கைது</strong></p>
<p>புதுக்கோட்டை, பிப்.22- இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.9 கோடி மதிப்பிலான போதை மாத்திரைகளை புதுக்கோட்டை காவல்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அளித்த பேட்டியில், “புதுக்கோட்டை நகரக் காவல் கண்காணிப்பாளர் இரா. பிருந்தா தலைமையிலான போலீசார் நகரப் பகுதியில்- திருமயம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமான வகையில் 4 பேர் அட்டைப் பெட்டிகளுடன் சாலையோரத்தில் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த இருந்ததும், வாகனம் ஒன்றுக்காக காத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்தச் செயலில் ஈடுபட்ட இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்(33), அமல்ராஜ்(37), பிரதாப் (35), சந்தியா(36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7 பெட்டிகளில் 4.82 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சந்தை மதிப்பு ரூ.9 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த மாத்திரைகள் உற்பத்தி செய்யப்பட்ட இடம் குறித்த விவரங்கள் பதிவிடப்படவில்லை. மாத்திரைகளை ஆய்வுக்கு அனுப்புகிறோம். அதன் அறிக்கை வந்தபிறகுதான் என்ன வகையான மாத்திரைகள் என்ற விவரங்கள் தெரியவரும். குற்றவாளிகள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, விசாரணைக் காவல் எடுத்து விசாரிக்கும்போது, இந்த போதை மாத்திரைக் கடத்தல், உற்பத்தி குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும். இதற்காக துணைக் காவல் கண்காணிப்பாளர் இரா.பிருந்தா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பொதுமக்கள் `டிரக் ப்ரீ டிஎன்’ என்ற செயலியைப் பயன்படுத்தி தகவல்களைச் சொல்லலாம்’’ என்றார்.</p>
