ராணிப்பேட்டையில் 9,44,701 வாக்காளர்கள்
23 Feb 2026, 6:26 pm
<p><strong>ராணிப்பேட்டையில் 9,44,701 வாக்காளர்கள்</strong></p>
<p>ராணிப்பேட்டை, பிப். 23 - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 2026ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா திங்க ளன்று (பிப். 23) வெளியிட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக் கோணம் (தனி) ஆண் 96982, பெண் 102157, மூன்றாம் பாலினம் 26 என 1,99,165 வாக்கா ளர்கள். சோளிங்கர் ஆண் 126034, பெண் 130072, மூன்றாம் பாலினம் 12 என 2,56,118 வாக்காளர்கள். ராணிப்பேட்டை ஆண் 119090, பெண் 126719, மூன்றாம் பாலினம் 44 என 2,45,853 வாக்காளர்கள். ஆற்காடு ஆண் 119107, பெண் 124429, மூன்றாம் பாலி னம் 29 என 2,43,565 வாக்காளர்கள் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆண் 461213, பெண் 483377, மூன்றாம் பாலினம் 111 என 9,44,701 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல்கள் அரக் கோணம் (தனி), சோளிங்கர், ராணிப் பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்ட மன்றத் தொகுதிகளில் உள்ள 632 வாக்குச்சாவடி அமைவிடங்கள் அமைந் துள்ள 1247 வாக்குச்சாவடிகள், நகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவல கங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக் காக வைக்கப்படும். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் இப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், மாவட்ட வருவாய் அலு வலர் செ. தனலிங்கம், நேர்முக உதவி யாளர் (பொது) இராஜராஜன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ராஜி, ரமேஷ், ஏகாம் பரம், மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.</p>
