8 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திடுக
24 Sept 2026, 12:54 am

8 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்திடுக

தருமபுரி, செப்.23-8 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மின்வாரிய ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்துறையை பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டும். 8 ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டும்.

70 வயது பூர்த்தியானவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தை, பென்சன் பாதுகாப்பு அம்சங்களோடு திருத்தம் செய்ய வேண்டும். மருத்துவக்காப்பீடு திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, ஓய்வு பெறும் அன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் புதனன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜயன், பொருளாளர் எம்.சின்னசாமி, மாவட்ட துணைத்தலைவர் ரகுபதிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கிளைத் தலைவர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். சிஐடியுமின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகி சி.ஜோதிமணி, சிவில் பென்சனர் அமைப்பின் செயலாளர்சி.பரமசிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிறைவாக சண்முகம் நன்றி கூறினார்.