தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரதமருக்கு சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் கடிதம்

27 Nov 2025, 3:11 pm
பிரதமருக்கு சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ் கடிதம்
<p>திருவனந்தபுரம் 8ஆவது மத்திய ஊதியக் குழுவின் விதிமுறை குறிப்புகள் (டேம்ஸ் ஆப் ரெபெரன்ஸ்-ToR) மற்றும் நிதி மசோதா, 2025 இன் &ldquo;சரிபார்ப்பு பிரிவு&rdquo; குறித்து கவலை தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் (கேரளா) பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த விதிகள் எதிர்காலத்தில் ஒன்றிய அரசு ஓய்வூதியதாரர்களிடையே பாகுபாட்டை உருவாக்கக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படி ஓய்வூதியதாரர்கள் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்பட வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டினார். விதிமுறை குறிப்புகள் (ToR) தற்போதுள்ள ஓய்வூதியதாரர்கள் புதிய ஓய்வு பெற்றவர்களுடன் சமமாக நடத்தப்படுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது. இது பாகுபாட்டிற்கு வழிவகுக்கும். விதிமுறை குறிப்புகளில் சேராத ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும்போது அரசாங்கம் நிதிப் பொறுப்பை (பங்களிப்பு இல்லாத ஓய்வூதியத் திட்டத்தின் நிதியில்லாத செலவு) எதிர்கொள்ளும் என்ற குறிப்பு, &ldquo;ஒத்திவைக்கப்பட்ட ஊதியம்&rdquo; என ஓய்வூதியத்தின் சட்டப்பூர்வ இருப்பை அச்சுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p> <p>ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முக்கியமான சலுகைகள் மறுக்கப்படுவது மற்றும் ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர்கள் தொடர்ந்து பணம் பங்களிப்பது குறித்து பிரிட்டாஸ் கவலை தெரிவித்தார். பணிமாற்றத்தை மீட்டெடுப்பதற்கான காலத்தைக் குறைத்தல், மருத்துவ உதவித்தொகையை அதிகரித்தல் மற்றும் கூடுதல் முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் போன்ற முக்கியமான பிரச்சனைகள் விதிமுறை குறிப்புகளில் சேர்க்கப்படவில்லை என்று ஜான் பிரிட்டாஸ் சுட்டிக்காட்டினார். தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களைப் பாதிக்கும் விதிமுறை குறிப்புகளில் உள்ள தெளிவின்மைகள் குறித்தும் அவர் கவனத்தை ஈர்த்துள்ளார். ஓய்வூதியதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் நியாயமானதாக இருப்பதை உறுதி செய்யவும், சரிபார்ப்பு பிரிவை தெளிவுபடுத்தவும், விதிமுறை குறிப்புகளை திருத்தவும் பிரிட்டாஸ் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.