விவசாய நிலத்தில் 86 தங்க நாணயங்கள் கண்டெடுப்பு
28 Dec 2025, 5:05 pm
<p><strong>விவசாய நிலத்தில் 86 தங்க நாணயங்கள் கண்டெடுப்பு</strong></p>
<p>திருப்பத்தூர், டிச.28 - திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம் பள்ளி பகுதியில் விவசாய நிலத்தை சமன் செய்யும் பணியின்போது பழங்காலத்து குடுவையில் 86 தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. விவசாயி ஆதவன் என்பவர் தனது நிலத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சமன் செய்யும்போது குடு வையைக் கண்டெடுத்தார். இது குறித்து தகவல் பரவியதை அடுத்து திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நாண யங்களை பறிமுதல் செய்தனர். “மீட்கப்பட்ட நாணயங்கள் தங்கம் என்று இன்னும் உறுதியாக வில்லை. தொல்லியல் துறை ஆய்வுக்குப் பிறகுதான் அது உறுதி செய்யப்படும். தற்போது திருப்பத் தூர் கருவூலத்தில் ஒப்படைக்கப் படும்” என வட்டாட்சியர் தெரி வித்தார். 1878 ஆம் ஆண்டு இந்திய புதை யல் சட்டத்தின்படி, கிடைக்கும் புதை யலை உடனடியாக காவல் நிலையம் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். உரிமை கோரும் வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில் மட்டுமே, புதையலுக்கான உரிமை நில உரிமை யாளருக்கு சென்று சேரும் என சட்டம் கூறுகிறது.</p>
