பத்திரிகை அஞ்சலுக்கான கட்டணம் 850 சதவிகிதம் அதிகரிப்பு வணிக நோக்கத்திற்கு மாற்றான பத்திரிகைகளை அழிக்கும் முயற்சி!
21 Jan 2026, 3:58 pm
<p><strong>பத்திரிகை அஞ்சலுக்கான கட்டணம் 850 சதவிகிதம் அதிகரிப்பு வணிக நோக்கத்திற்கு மாற்றான பத்திரிகைகளை அழிக்கும் முயற்சி!'</strong></p>
<p>மதுரை, ஜன. 21 - 7 நாட்களுக்கு மேல் கால இடைவெளி கொண்ட இதழ்களுக் கான அஞ்சலக சலுகைகளை நீக்கும் விதிமுறைகளைக் கைவிட வேண் டும் என்று ஒன்றிய அரசை, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். பத்திரிகைகளுக்கான நூல்-அஞ்சல் கட்டணத்தை 850 சதவிகி தம் அதிகரித்திருப்பது, வணிக நோக்கத்திற்கு மாற்றாக நடத்தப் படும் அத்தனை இதழ்களையும் அழிக் கும் முயற்சி என்றும் சு. வெங்கடே சன் எம்.பி. விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, ஒன்றிய தகவல் தொடர்புத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள சு. வெங்கடே சன் எம்.பி., அதில் கூறியிருப்பதாவது: விடுதலை உணர்வை வளர்த்த அச்சு ஊடகங்கள் “இந்தியாவின் விடுதலைப் போராட்டமும், ஜனநாயகப் பயண மும் அச்சு ஊடகங்களின் வலிமை யால் வடிவமைக்கப்பட்டவை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களைத் தூண்டிய தேசிய இதழ் கள் முதல், மொழி, கலாச்சாரம் மற்றும் பொதுநலனை வளர்க்கும் இன்றைய இதழ்கள் வரை, நமது ஜனநாயகத்தையும் அரசியல மைப்பு விழுமியங்க ளையும் வலுப்படுத்து வதில் இதழ் கள் முக்கியப் பங்கு வகின்கின்றன. இந்தச் சூழலில், அண்மைய ‘அஞ்சலக விதிமுறைகள் 2024’ (Post Office Regulations 2024) கார ணமாக சிறு மற்றும் நடுத்தரப் பதிப்பா ளர்கள் சந்திக்கும் கடுமையான சவால்களைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். அஞ்சல் சலுகை மறுப்பால் பத்திரிகைகளுக்கு பாதிப்பு புதிய வரைமுறை மற்றும் விதி முறைகளின்படி, ஏழு நாட்கள் வரை யிலான கால இடைவெளியில் வெளி வரும் இதழ்கள் மட்டுமே ‘பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்களாக’ (Registered Newspapers) கருதப் படுகின்றன. 7 நாட்களுக்கு மேல் கால இடைவெளி கொண்ட இதழ்கள் ‘காலமுறை அஞ்சல்’ (Periodical Post) பிரிவின் கீழ் வகைப்படுத்தப் பட்டு, அவற்றுக்கு நீண்டகாலமாக வழங்கப்பட்டு வந்த அஞ்சல் சலுகைகள் மறுக்கப்படுகின்றன. பொதுநலன் சார்ந்த இதழியல் துறையை அழித்து விடும் இந்த மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் கடுமையானவை: * கட்டண உயர்வு: புதிய விதி களின்படி, 200 கிராம் எடையுள்ள ஓர் இதழுக்கு ஒரு நகலுக்கு ரூ. 9 அஞ்சல் கட்டணமாக வசூலிக்கப்படு கிறது. * சலுகை இழப்பு: முன்னதாக, இதே இதழ் 95 பைசா என்ற சலுகை கட்டணத்தில் அனுப்பப்பட்டு வந்தது. * நிதிச் சுமை: இது ஒரு நக லுக்கு ரூ. 8.05 கூடுதல் செலவை ஏற்ப டுத்துகிறது. வணிக நோக்கம் அன்றி, பொதுநலன் சார்ந்த இதழியல் நடத்தும் பதிப்பாளர்களால் இந்தச் சுமையைத் தாங்க இயலாது. * வாழ்வாதார அச்சுறுத்தல்: இவ்வளவு செங்குத்தான கட்டண உயர்வு, இலக்கியம், சமூக சீர்திருத் தம், பொதுக் கொள்கை மற்றும் பிராந்தியப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் இருவார மற்றும் மாத இதழ்களைத் தொடர்ந்து நடத்து வதை பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றதாக மாற்றுகிறது. விளிம்பு நிலை மக்களின் கருத்துக்கள் முடக்கப்படும் இவற்றில் பல இதழ்கள் லாப நோக்கிலான நிறுவனங்கள் அல்ல; மாறாக, மொழிப் பன்முகத்தன்மை யைப் பாதுகாக்கும், விவாதங் களை ஊக்குவிக்கும் மற்றும் விளிம்பு நிலை மக்களின் குரலாக ஒலிக்கும் கலாச்சாரக் கருவிகளாகும். இவற்றை நலிவடையச் செய்வது, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் 19(1)(a) பிரிவின் நோக்கத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும். தகவல் பரிமாற்றம் ஒரு பொதுச் சேவை என்பதை அங்கீகரித்து, இந்திய அரசு வரலாற்று ரீதியாக அஞ்சல் சலுகைகளை வழங்கி வந்து உள்ளது. தற்போதைய விதிமுறை கள் நிர்வாகக் காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், அவை தசாப்தங்களாக சமூக விழிப்பு ணர்விற்கும் தேசக் கட்டமைப்பிற் கும் பங்களித்து வரும் பல இதழ் களை முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன. சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்! எனவே, அஞ்சலக விதிமுறைகள் 2024-ஐ மீண்டும் பரிசீலனை செய்து, கால இடைவெளியைப் பொருட்படுத்தாமல் பதிவுசெய்யப் பட்ட அனைத்து இதழ்களுக்கும் மீண்டும் அஞ்சல் சலுகைகளை வழங்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.</p>
