முந்தய பக்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் 80 வீடுகள் சேதம்; 65 கால்நடைகள் பலி

1 Dec 2025, 5:20 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் 80 வீடுகள் சேதம்; 65 கால்நடைகள் பலி
<p><strong>தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் 80 வீடுகள் சேதம்; 65 கால்நடைகள் பலி</strong></p> <p>தஞ்சாவூர், டிச.1- &nbsp;தஞ்சை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 46 குடிசை வீடுகள் , 34 கான்கிரீட் வீடுகள் &nbsp;இடிந்து விழுந்து சேதமடைந்தன. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதே போல் 65 கால்நடைகளும் பலியாகின. மேலும் மழையினால் 11 ஆயிரத்து 250 ஏக்கர் நெற்பயிர்கள் நிரில் மூழ்கின. வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு ஏதுவாக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டதால், தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது. இன்னும் 2 ஆயிரம் ஏக்கரில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் பயிர்கள் அழுகி வருகின்றன. இதே போல் தோட்டக்கலை பயிர்களும் 200 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram