இளமையாக வாழ எட்டு வழிகள்!
4 Jul 2026, 9:20 pm
<p><strong>இளமையாக வாழ எட்டு வழிகள்!</strong></p><p>உடலின் முதுமையைத் தள்ளிப் போட உதவும் ஆரோக்கியமான எட்டு வழிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். உடல் எடை பராமரிப்பு, சர்க்கரை-கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு, சீரான இரத்த அழுத்தம், ஊட்டச்சத்துள்ள உணவு, ஆரோக்கியமான தூக்கம், உடலியல் செயல்பாடுகள் மற்றும் புகைப் பழக்கமற்ற நிலை ஆகிய இந்த எட்டுப் பழக்கவழக்கங்கள் ஒருவரின் முதுமை அடையும் செயல்முறையை ஆறாண்டுகள் வரை தள்ளிப் போடுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க இதயநல சங்கத்தின் (AHA) அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வு, ஒருவரின் பிறந்த ஆண்டு சார்ந்த ‘க்ரோனாலஜிக்கல்’ (Chronological) வயதிற்கும், உடலின் செல்கள் மற்றும் திசுக்களின் செயல்பாட்டைப் பொறுத்த ‘உயிரியல்’ (Biological) வயதிற்கும் இடையிலுள்ள தொடர்பை விளக்குகிறது. ஆரோக்கியமான இதயம் கொண்டவர்கள் தங்களின் உண்மையான வயதை விடக் குறைந்த உயிரியல் வயதுடையவர்களாக இளமையோடு வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டாக, 41 வயதுடைய ஒருவர் சிறந்த இதய ஆரோக்கியத்தைப் பெற்றிருந்தால், அவரது உயிரியல் வயது 37 மட்டுமே. அதே சமயம், மோசமான இதய நலன் கொண்ட 53 வயது நபரின் உயிரியல் வயது 57 ஆக உயர்கிறது. ‘லைஃப்ஸ் எசென்ஷியல் 8’ (Life’s Essential 8) என்ற இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், நாள்பட்ட நோய்களின் அபாயம் குறைந்து, வாழ்நாளின் தரம் கூடும் என்று கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் நெர் மேக்கன் குறிப்பிடுகிறார்.</p>
