சாலை விபத்தில் 8 பேர் படுகாயம்
28 Nov 2025, 2:28 pm
<p><strong>சாலை விபத்தில் 8 பேர் படுகாயம்</strong> </p>
<p>திருவில்லிபுத்தூர் ,நவ. 28 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வியா ழக்கிழமை அன்று நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த 8 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த பாண்டி, முருகன், செந்தில் குமார், பார்த்திபன். இவர்கள் நால்வரும் இனோவா காரில் இராஜபாளையத்தில் தங்களது நண்பரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு வியாழக்கிழ மை அன்று மாலை மதுரை திரும்பி கொண்டிருந்தனர். வன்னியம்பட்டி காவல் நிலையம் அருகே வந்த இனோவா முன்னால் சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்ல முற்படும்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது மோதி தொடர்ந்து சிவகாசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்த கார் மீதும் மோதியது. அடுத்தடுத்து இவ்வாறாக ஏற்பட்ட இல்விபத்தில் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கார் மற்றும் இனோவா இரண்டும் கவிழ்ந்தது. இவ்விபத்தில் நான்கு சக்கர இனோவா காரில் பயணித்த நால்வரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் இன்னோவா காரை ஓட்டி வந்த முருகன் என்பவர் சுயநினைவை இழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் பயணித்த வசந்தகுமார் பலத்த காயம டைந்தார். சுயநினைவை இழந்த முருகன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் இருசக்கர வாகனத்தில் வந்த வசந்தகுமார் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப் பட்டனர். இந்த சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்</p>
