முந்தய பக்கம்

தஞ்சையில் 8 கி.மீ. தூர ஆரோக்கிய நடைபயிற்சி

1 Feb 2026, 3:51 pm
தஞ்சையில் 8 கி.மீ. தூர ஆரோக்கிய நடைபயிற்சி
<p><strong>தஞ்சையில் 8 கி.மீ. தூர ஆரோக்கிய நடைபயிற்சி</strong></p> <p>தஞ்சாவூர், பிப்.1 - தமிழ்நாடு அரசின் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை &nbsp;சார்பில் துவங்கப்பட்ட &ldquo;நடப்போம் நலம்பெறு வோம்&rdquo; என்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை &nbsp;மாதந்தோறும் முதல் ஞாயி றன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு திடல் &nbsp;நடைபயிற்சியாளர் சங்கத்தி னர் நடத்தி வருகின்றனர். அதன்படி, ஞாயிறன்று 19 ஆவது மாதமாக மாநகர சுகாதாரத் துறையுடன் இணைந்து 8 கிலோ மீட்டர் தூர ஆரோக்கிய நடை பயிற்சியை மேற்கொண்ட னர். இந்த நடைபயிற்சியை சதய விழா குழு தலைவர் து.செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். நடை பயிற்சியாளர்கள் சங்க தலை வர் சீனிவாசன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மாநகர &nbsp;சுகாதாரத் துறை அலுவலர் நமச்சிவாயம் இளைஞர்கள், மாணவர்கள், &nbsp;மகளிர் உள் ளிட்ட ஏராளமானோர் உற்சா கத்துடன் பங்கேற்று புதிய &nbsp;பேருந்து நிலையம் வரை &nbsp;சென்று, மீண்டும் அதே வழி யாக அன்னை சத்யா விளை யாட்டு திடலை வந்தடைந்த னர். நடைபயிற்சியில், பங்கேற்ற அனைவருக்கும் ஆரோக்கிய சிற்றுண்டியான சுண்டல் வழங்கப்பட்டது. இளங்கோ நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram