முந்தய பக்கம்

சேலம் அருகே கோர விபத்து அரசு பேருந்து மோதி 8 பேர் பலி!

20 Mar 2026, 2:55 pm
சேலம் அருகே கோர விபத்து அரசு பேருந்து மோதி 8 பேர் பலி!
<p><strong>அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு அனுரா அதிரடி</strong></p> <p>கொழும்பு, மார்ச் 20 - ஈரான் மீது அமெரிக்கா வும் இஸ்ரேலும் பிப்ரவரி 28 அன்று போரை துவங்கின. இந்த பின்னணியில் இந்தி யாவின் கடற்படை நிகழ்வு க்கு &nbsp;விருந்தினராக வந்து திரும்பிய ஈரானின் ஐரிஸ் டெனா கடற்படை கப்பலை மார்ச் 4 அன்று இரவில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் இந்தியப் பெருங்கடலில் தாக்கி மூழ்கடித்தது. &nbsp;இதனை இந்தியா வேடிக் கை பார்த்த நிலையில், ஈரான் கப்பலில் பலியானவர்களை யும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களையும் துணிச்சலாக செயல்பட்டு இலங்கை கற்படை மீட்டது.இந்நிலையில் தான், அதே மார்ச் 4 அன்று ஜிபூட்டியில் (Djibouti) இருந்து &nbsp;கப்பல் அழிப்பு ஏவுகணைகளுடன் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க அனுமதி கோரி யதாகவும், அந்தக் கோரிக் கையை தாம் நிராகரித்து விட்டதாகவும் ஜனாதிபதி அனுர குமார திஸா நாயக்க நாடாளுமன்றத்தில் தெரி வித்துள்ளார். மார்ச் &nbsp;8 அன்று &nbsp;அமெரிக்கா இரண்டாவது முறையாக அனுமதி கோரிய நிலையில், அப்போதும் நிராகரித்துவிட்டதாக தெரி வித்துள்ளார். &nbsp;பல அழுத்தங்கள் இருந்த போதிலும் எங்களது நடு நிலைமையைப் பேண நாங் கள் விரும்புகிறோம். நாங்கள் எதற்கும் அடிபணியமாட் டோம். மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரில் நடு நிலையாக இருக்க சாத்திய மான அனைத்தையும் செய்வோம்,&rdquo; என்று அனுர குமார திஸா நாயக்க மிகுந்த துணிச்சலுடன் அறிவித்துள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram