8 மணி நேர வேலை; ரூ.26 ஆயிரம் மாத ஊதியம்: திமுக தேர்தல் அறிக்கைக் குழுவிடம் கோரிக்கை
14 Feb 2026, 4:33 pm
<p><strong>8 மணி நேர வேலை; ரூ.26 ஆயிரம் மாத ஊதியம்: திமுக தேர்தல் அறிக்கைக் குழுவிடம் கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், பிப்.14 - தமிழகத்தில் விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு எட்டு மணி நேர வேலையும், மாத ஊதி யம் ரூ. 26,000 வழங்குவதற்கு திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மே ளனம் (சிஐடியு) கோரியுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு உட் பட்ட தொகுதிகளுக்கான கோரிக்கைகள் குறித்து கேட்டறிவதற்கு திமுக தேர்தல் அறிக்கைக்குழு சனியன்று பல்லடம் அருகே காரணம்பேட்டை வந்தது. இங்குள்ள வெங்க டேஸ்வரா மஹாலில் பல்வேறு தொழில், விவ சாய, வர்த்தக அமைப்பினரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். திமுக மேற்கு மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, அமைச்சர் முத்துசாமி, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சார் பில் அமைச்சர் கோவி செழியன், கார்த்தி கேய சிவசேனாதிபதி, தமிழரசி ரவிக்குமார் உள்பட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம் மேளன மாநில பொதுச்செயலாளர் பி. முத்து சாமி அளித்த மனுவில், பல்வேறு நெருக்கடி களை சந்திக்கும் விசைத்தறி தொழிலில் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 10 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் வரை வேலை செய்யும் நிலை உள்ளது. தொழிலா ளர் இயக்கும் விசைத்தறியின் எண்ணிக்கை யும் சராசரியாக 8இல் இருந்து 16 ஆக அதிக ரித்து இருக்கிறது. எனினும் விசைத்தறி தொழி லாளியின் உடல் உழைப்புக்குத் தகுந்த கூலி கிடைக்காத நிலை உள்ளது. தினமும் ரூ. 400 முதல் 500 வரை மட்டுமே கூலியாகப் பெறுகின்றனர். இதை கொண்டு தொழிலாளர்கள் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் கடுமையாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வு, அன்றாட மற்றும் அவசிய செலவுகளுக்காக ஒவ் வொரு தொழிலாளியும் அட்வான்ஸ் என்ற பெயரில் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்குவது, நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுவது, கடன் மேல் கடன் பெற்று தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு விசைத்தறி தொழிலா ளர்கள் நிலை மிக மோசமாக உள்ளது. எனவே விசைத்தறி தொழிலாளியின் வேலை நேரத்தை நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரமாக மாற்றி குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப், சட்ட உரிமைகள் மற்றும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். விசைத்தறியை நவீனப்படுத்த மானியம் இத்துடன் திருப்பூர், கோவை மாவட்ட கிராமப்புறங்களில் 1970க்கு பின்பு விசைத்தறி தொழில் வளர்ந்து வந்தது. 2010 ஆம் ஆண் டிற்கு பின் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள விசைத்தறிகளை பழைய இரும்புக்கு ரூ.25,000 முதல் 28,000 வரை எடைக்கு விற்பனை செய்யும் அவல நிலை உள்ளது. விசைத்தறி தொழிலை பாதுகாக்க, விசைத்தறிகளை நவீனப்படுத்த தமிழக அரசு விசைத்தறி ஒன்றுக்கு 50 சதவீதம் மானியம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. எனி னும் இதை கூலிக்கு நெசவு செய்யும் விசைத்த றியாளர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே விசைத்தறிகளை நவீனப் படுத்த 100 சதவிகிதம் மானியம் என்பதை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் பி.முத்துசாமி கேட் டுக் கொண்டிருக்கிறார்.</p>
