முந்தய பக்கம்

ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி

16 Feb 2026, 2:37 pm
ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி
<p><strong>ரம்ஜானை முன்னிட்டு நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி</strong></p> <p>சின்னாளப்பட்டி, பிப்.16- ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், &nbsp;ரம்ஜான் பண்டிகையை முன் &nbsp;னிட்டு நோன்பு கஞ்சிக்காக இந்த ஆண்டு ரூ.20 கோடி யே 88 லட்சம் மதிப்பீட்டில் 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்பட உள்ளதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய டவுன் பள்ளிவாசலை அமைச்சர் அர.சக்கரபாணி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள &nbsp;அனைத்து பள்ளிவாசல்களி லும் ரம்ஜான் நோன்பு காலத் &nbsp;தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சிக்காக 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி முதலமைச்சர் மூலம் வழங்கப்பட உள்ள தாகவும், இதற்காக ரூ.20 &nbsp;கோடியே 88 லட்சம் நிதி &nbsp;ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, நகர்மன் &nbsp;றத் தலைவர் திருமலைச் சாமி, ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram