புதுச்சேரியில் ரூ. 8.4 கோடி பறிமுதல்
9 Apr 2026, 5:30 am

புதுச்சேரியில் ரூ. 8.4 கோடி பறிமுதல்

புதுச்சேரி, ஏப்.5- புதுச்சேரியில் ரூ. 77.25 லட்சம் பணம், மதுபானங்கள் ரூ. 65 லட்சம், போதைப்பொருட்கள் ரூ. 21 லட்சம், தங்கம், வெள்ளி போன்றவை ரூ. 6.71 கோடி என மொத்தம் ரூ. 8.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தெரியாத எண்ணிலிருந்து வரும் உங்கள் எண்ணுக்கு வந்தால் சிவிஜில் மூலம் புகார் தரலாம். கடந்த முறையை விட மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கூடுதல் தொகை பறிமுதலாகியுள்ளது. வெளிநாட்டு பார்வையாளர்கள் புதுச்சேரி தேர்தல் பார்வையிட இந்தோனேசியா, மாலத்தீவு, மங்கோலியா, பூடான் உட்பட ஆறு வெளிநாடுகளில் இருந்து 9 உறுப்பினர்கள் புதுச்சேரி வந்துள்ளனர்.

இணையத்தளத்தில் தவறான தகவல் இருக்கிறதா என்பதை கண்காணித்து சைபர் கிரைம் மூலம் மென்பொருள் திட்டம் மூலம் கண்டறிந்து தவறான 113 தகவல்கள் அடையாளம் காணப்பட்டுஅகற்றப் பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த 9 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை 90 சதவீதம் வரை எதிர்பார்க்கிறோம். முதல் முறை வாக்காளர்கள் 24,919 பேர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 24 ஆயிரம் 919 பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆவர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை.