தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சீனப் புரட்சியின் 77 ஆண்டுகள்: சோசலிசம் படைத்த சாதனைகள் - அ.அன்வர் உசேன்

18 Oct 2026, 12:48 am
சீனப் புரட்சியின் 77 ஆண்டுகள்: சோசலிசம் படைத்த சாதனைகள் - அ.அன்வர் உசேன்

சீனப் புரட்சியின் 77 ஆண்டுகள்: சோசலிசம் படைத்த சாதனைகள் - அ.அன்வர் உசேன்

1949 அக்டோபர் 1. பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், புரட்சியாளர் மாவோ ‘மக்கள் சீனக் குடியரசு’ (People’s Republic of China) உதயமானதை அறிவித்தார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அன்னிய ஆதிக்கத்தின் பிடியில்சிக்கி, ‘ஆசியாவின் நோயாளி’ என்று ஏளனம் செய்யப்பட்ட நாடு அது; அந்தநாள் அதன் வரலாற்றையே திருப்பிப்போட்டது. உள்நாட்டுப் போர், ஜப்பானின் அழிவுகரமான படையெடுப்பு, பிற வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம்ஆகியவற்றால் சாம்பலாகிப்போன சமூகத்திலிருந்தே சீன சோசலிசம் எழுச்சி பெற்றது.

அன்று தொடங்கிய பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த ஒருசமூகத்தைச்சோசலிசத்தால் என்ன செய்ய முடியும் என்பதற்குச் சாட்சியமாக, புரட்சியின் 77ஆம் ஆண்டில் சீனா நிற்கிறது.

வாழ்வும் கல்வியும் வளமும்

1949இல் சீன மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 36 ஆண்டுகள். 1972இல் அது சுமார் 61 ஆக உயர்ந்தது; தற்போது78. அதாவது, சராசரி மனித வாழ்நாள் இரு மடங்குக்கும் மேல் நீண்டுள்ளது.அன்று சுமார் 80% பேர் எழுத்தறிவற்றவர்கள்; இன்று கல்வியறிவு விகிதம் 98%க்கும் அதிகம். எழுத்தறிவில்லாத நாடு, எழுத்தறிவு பெற்ற நாடாக மாறியுள்ளது; இதுவே பிற சாதனைகளுக்கு அடித்தளம்.சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜி.டி.பி.) 1952இல் 67.9 பில்லியன் யுவான்; 1978இல் 364.5 பில்லியன் யுவான்; 2025இல் 140.2 டிரில்லியன் யுவான். 1978முதல் சராசரியாக ஆண்டுக்கு 9%க்கும் அதிகமாக வளர்ந்து வருகிறது. சில பத்தாண்டுகளில் இவ்வளவு நீடித்தவளர்ச்சி உலக வரலாற்றில் அரிது.

வறுமையிலிருந்து மீட்பு

1978 முதல் கிட்டத்தட்ட 80 கோடி மக்களைச் சீனா கடும் வறுமையிலிருந்து மீட்டுள்ளது. இக்காலத்தில் உலகளவில் கடும் வறுமைக் குறைப்பில் சுமார் 75%பங்கு சீனாவுடையது. உலக வங்கியின் கணக்குப்படி, 1981இல் சுமார் 84 கோடி சீனர்கள் சர்வதேச வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்தனர். நாளொன்றுக்கு 3 அமெரிக்க டாலருக்குக் குறைவான வருமானம்என்ற அந்தக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோரின் பங்கு 2022க்குள் பூஜ்ஜியமாகிவிட்டது. வறுமையை ஒழிக்க முடியாது என்ற வாதத்துக்கு இது தரவுகளின் வழிதரப்பட்ட பதில்.

கட்டமைப்பிலும் தொழிலிலும் பாய்ச்சல்

புரட்சி நடந்த 1949இல் சீனாவில் ரயில்பாதை சுமார் 2,200 கி.மீ. மட்டுமே; 2025 இறுதியில் 1,65,000 கி.மீ.க்கு மேல். அன்று அதிவேக ரயிலே இல்லை; இன்று 50,000 கி.மீ.க்கு மேல், உலகின் மொத்த அதிவேகப்பாதையில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகம்; ஒரு காலத்தில் கனவாக இருந்தது இன்று அன்றாட யதார்த்தம்.1949இல் சுமார் 81,000 கி.மீ. சாலைகள்; இன்று 54 லட்சம் கி.மீ.க்கு மேல். இதில்சுமார் 1,90,000 கி.மீ. அதிவேகச் சாலைகள் (எக்ஸ்பிரஸ்வே); இது உலகின் மிகப்பெரிய அதிவேகச் சாலை வலைப்பின்னல். தொலைவுகளைச் சுருக்கிய இந்தக் கட்டமைப்பே மக்களையும்சந்தைகளையும் இணைக்கும் அடித்தளம்.தொடர்ந்து 16 ஆண்டுகளாகச் சீனாவின் உற்பத்தித் துறையே உலகில் மிகப்பெரியது. 2020களில் உலக உற்பத்திமதிப்புச் சேர்க்கையில் அதன் பங்கு 28%க்கும் மேல். சீனாவின் உற்பத்தி மதிப்புச் சேர்க்கை 2020இல் 26.5 டிரில்லியன் யுவானிலிருந்து 2025இல் 34.7 டிரில்லியனாகவும், தொழில்துறை மதிப்புச் சேர்க்கை 31.1 டிரில்லியனிலிருந்து 41.7 டிரில்லியனாகவும் உயர்ந்தது. உலகின்தொழிற்சாலையாகச் சீனா மாறியதன் பின்னணி இதுவே.

புதிய ஆற்றல், புதிய தொழில்நுட்பம்

2025இல் சீனா 1.65 கோடி புதிய ஆற்றல்வாகனங்களைத் தயாரித்தது; இது 2020இல் தயாரிக்கப்பட்ட 14.6 லட்சத்தைப்போல 11 மடங்குக்கும் அதிகம். தொடர்ந்து 11 ஆண்டுகளாக இவ்வாகனங்களின் உலகின் மிகப்பெரியஉற்பத்தியாளரும் விற்பனையாளரும் சீனாவே. எதிர்கால எரிசக்தியில் சீனா முன்னணியில் நிற்பதற்கு இது ஒருசான்று.அதே ஆண்டில் மரபுசாரா எரிசக்தி மூலம் சுமார் 4 டிரில்லியன் கிலோவாட்-மணிமின்சாரம் உற்பத்தி செய்தது; இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளின் மொத்த மின் நுகர்வை விட அதிகம்.2025இல் மட்டும் கிட்டத்தட்ட 500 ஜிகாவாட்புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனைச் சேர்த்தது; இது அந்த ஆண்டின் உலகவளர்ச்சியில் 60%க்கும் மேல். 2025 இறுதியில் 48.4 லட்சம் 5ஜி அடிப்படை நிலையங்கள் (2020ஐ விட ஐந்து மடங்குக்கும் அதிகம்); 2024இல் டிஜிட்டல் பொருளாதாரம் ஜி.டி.பி.யில் 33.1%.3,500க்கும் மேற்பட்ட அடிப்படை நிலை, 8,200 மேம்பட்ட நிலை, 500 உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட்தொழிற்சாலைகளைச் சீனா கட்டமைத்துள்ளது. மற்ற தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்களான ‘லைட்ஹவுஸ் தொழிற்சாலைகள்’ (Lighthouse factories) 101அங்கீகரிக்கப்பட்டுள்ளன; செயற்கை நுண்ணறிவும் திறன்மிக்க உழைப்பாளிகளும் இங்கு இணைந்து பணியாற்றுகின்றனர். வேறு எந்த நாட்டிலும் இத்தனை இல்லை.

உலகப் பொருளாதாரத்தில் சீனா

வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரம்: சீனாவின் ஜி.டி.பி. 44.3டிரில்லியன் டாலர்; அமெரிக்காவுடையது 32.4 டிரில்லியன் டாலர். 2024இல் உலக ஜி.டி.பி.யில் சீனாவின் பங்குகிட்டத்தட்ட 16.9%. 2025இல் மொத்த வர்த்தகப் பொருட்களின் மதிப்பு 45.5 டிரில்லியன் யுவானைஎட்டியது. 140க்கும் மேற்பட்ட நாடுகள், பிராந்தியங்களின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளி சீனா. ‘பெல்ட் &ரோடு’முன்முயற்சி (Belt & Road Initiative) 150க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களாக விரிந்துள்ளது.உணவுப் பாதுகாப்பிலும் வருமானத்திலும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. 2025இல் தானிய உற்பத்தி 1.43 டிரில்லியன் ஜின் (ஒரு ஜின் = 0.5 கிலோ); தனிநபர் தானிய இருப்பு சுமார் 509 கிலோ,சர்வதேச உணவுப் பாதுகாப்பு அளவுகோலான 400 கிலோவைத் தாண்டியது. நகர்ப்புறத் தனிநபர் செலவிடத்தக்க வருமானம் 2013இல் 26,955 யுவான்; 2025இல் 56,502 யுவான். கிராமப்புறத்தில் 8,896 யுவானிலிருந்து 24,456 யுவானாகஉயர்ந்தது. (ஒரு யுவான் = ரூ.14.37) நகர்ப்புறத்தை விடக் கிராமப்புற வருமானம் வேகமாக உயர்ந்திருப்பது கவனிக்கத்தக்கது.

உலக அரங்கில் சோசலிசத்தின் குரல்

1949இல் உலகப் பொருளாதாரத்தில் மிகச் சிறிய பங்கே வகித்த நாடு, இன்று

உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தி.இந்த மாபெரும் முன்னேற்றமே அமெரிக்காவுக்குச் சவால் விடும் நிலைக்குச் சீனாவை உயர்த்தியுள்ளது. அதன் தாக்கம் எல்லைகளைக் கடந்து உணரப்படுகிறது. அமெரிக்காவின் மிரட்டலையும் மீறிப் பாலஸ்தீனம், கியூபா, வெனிசுலா போன்றநாடுகளுக்கு உதவுகிறது. பிரிக்ஸ் அமைப்பின் அச்சாணியாகச் செயல்பட்டு, அமெரிக்காவின் ஒற்றைத் துருவ அரசியலுக்குச் சவால் விடுகிறது. அமெரிக்காவால் தாக்கப்படும் ஈரானுக்கு உதவுகிறது; ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்க மிரட்டலைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள்பொருளாதாரத் தன்னிறைவு அடைய உதவுகிறது; வளரும் நாடுகளுக்கு மாற்றுப் பாதையைக் காட்டுகிறது.

இவையெல்லாம் சோசலிச உற்பத்திமுறை உருவாக்கிய சூழலும் சாதனைகளுமே என்பதில் இரண்டாம் கருத்துக்குஇடமில்லை. ‘சோசலிசம் மரணித்துவிட்டது’ எனக் கொக்கரித்தவர்களுக்குச் சீனா பதிலடி தந்துள்ளது எனில் மிகையல்ல. புரட்சியின் 77ஆம் ஆண்டில், சோசலிசத்தின் சாத்தியங்களுக்குச் சீனா ஒரு வாழும் சான்றாக நிற்கிறது.(தரவுகள்: ரஷ்யா டைம்ஸ் ஊடகவியலாளர் அஃப்ஷின் ரட்டான்சி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.