தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அனுமதியின்றி எழுப்பிய 75 கட்டிடங்களுக்கு ‘சீல்’

17 Feb 2026, 3:36 pm
அனுமதியின்றி எழுப்பிய 75 கட்டிடங்களுக்கு ‘சீல்’

அனுமதியின்றி எழுப்பிய 75 கட்டிடங்களுக்கு ‘சீல்’ நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தகவல்

உதகை, பிப்.17- நீலகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விதி மீறி கட்டிடம் கட்டி னாலோ, அனுமதியின்றி எழுப்பப் படும் கட்டிடங்களுக்கு சீல் வைக் கப்பட்ட பின்பு, அதில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என ஆட்சி யர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்ச ரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கட்டி டங்கள் கட்ட பல்வேறு விதிமுறை கள் இருந்தும், பல்வேறு பகுதி களில் விதி மீறிய கட்டிடங்கள் கட் டப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால் விதி மீறி கட்டப் படும் கட்டிடங்களுக்கு சென்னை  உயர் நிதிமன்ற உத்தரவுபடி சீல்  வைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம் சீல் வைக்கப்பட்ட கட் டிடத்தில் அத்துமீறி நுழைந்த உரிமையாளர்கள், கட்டுமானப் பணியை மேற்கொண்டதன் காரண மாக ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் குடி யிருப்பு மற்றும் வணிக கட்டிடங் கள் கட்ட அனுமதி கோரும் பொது மக்கள்  www.onlineppath.gov.in  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் இதுதொடர் பாக ஏற்படும் சந்தேகம் விபரங்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித் தவர்கள் மாவட்ட ஆட்சியகரத்தி லுள்ள 9442772701 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டும், இதே எண் ணிற்கு வாட்ஸ் அப் மூலமாகவும் விவரம் அனுப்பி, தங்களது விண் ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். அதேபோல் விதி மீறல்கள் நடைபெற்றால் உடனடி யாக பொதுமக்கள் இந்த எண்ணை  தொடர்பு கொண்டு புகார் அளிக் கலாம். மாவட்டம் முழுவதும் கட்டிடங் கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முறையாக அனுமதி பெற்று கட் டப்படுகிறதா? அல்லது விதி மீறி  கட்டப்பட்டு வருகிறதா? என அதிகா ரிகள் ஆய்வு செய்து வருகின்ற னர். ஆய்வில் விதி மீறல்கள் இருப் பது கண்டறியப்பட்டாலோ அல் லது விதிமீறிய கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட பின் அதில் கட்டு மானப் பணிகளை மேற்கொண்டா லும் கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்சரிக்கை விடுத் துள்ளார். தற்போது 900 மேற்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங் கப்பட்டுள்ளதாகவும், 75 கட்டிடங்க ளுக்கு முழுமையாக சீல் வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆட்சி யர், பிப்.27 ஆம் தேதி நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வரவுள்ள தால், நீதிமன்ற விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.