தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

27 Mar 2026, 3:15 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

அசாமில்  722 வேட்பாளர்கள்

126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் ஏப்ரல் 9 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்த 67 பேர், மனுக் களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான மார்ச் 26 அன்று வாபஸ் பெற்றுக் கொண்டனர். அதிகபட்சமாக அசாம் தன்னாட்சி மாநிலக் கோரிக்கை குழு  (மக்கள் ஜனநாயக முன்னணி) கட்சியைச்  சேர்ந்த 4 முக்கிய நிர்வாகிகள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அசாமில் இறுதி யாக 722 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர் என்று மாநில தேர்தல் அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பொதுமுடக்கம் இல்லை:  ஒன்றிய அமைச்சர்கள்

விளக்கம் 3 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் பிரதமர் மோடி, “மேற்கு ஆசியப் போரால் இந்தியா கொரோனா போன்ற நெருக்கடியை மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளது. நாட்டு மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார். மோடி பேசிய  இரண்டே நாட்களில் மேற்கு ஆசியப் போரால் நிலவும் தட்டுப்பாடுகள் காரண மாக இந்தியாவில் பொதுமுடக்கம்  அமலாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள  தாக சமூக வலைத்தளங்களில் டிரெண் டிங் அளவில் செய்திகள் வைரலாகின. இந்நிலையில், இந்தியாவில் பொது முடக்கம் என்ற தகவல் முற்றிலும் பொய் யானவை என ஒன்றிய அமைச்சர்கள் வெள்ளியன்று விளக்கம் அளித்தனர். ஒன்றிய பெட்ரோலியத் துறை  அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மேற்கு ஆசிய நெருக்கடி காரணமாக இந்தி யாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப் படலாம் எனப்பரவும் வதந்திகள் பொறுப் பற்றவை மற்றும் தீங்கு விளைவிப்பவை ஆகும். உலகளாவிய எரிசக்தி மற்றும் விநியோகச் சங்கிலியை அரசு உன்னிப் பாகக் கண்காணித்து வருகிறது. எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடு க்கப்பட்டுள்ளன” என அவர் கூறினார். அதேபோல ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்பதை நான் மக்களுக்கு உறுதிபடத் தெரி வித்துக் கொள்கிறேன். கொரோனா  காலத்தைப் போன்ற ஒரு பொதுமுடக்கம் மீண்டும் வரும் என்று சொல்வது அடிப்ப டை ஆதாரமற்றது” என்று அவர் கூறினார்.

போதுமான உர இருப்பு உள்ளது : நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

ராமநவமி விடுமுறைக்குப் பின்பு, நாடாளுமன்ற பட்ஜெட்  கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு வெள்ளியன்று மீண்டும் கூடியது. மக்க ளவையில்  ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா,  “நாட்டில் விவசாயிகளுக்குத் தேவை யான உரங்களை வழங்க போதிய இருப்பு உள்ளது. இது குறித்து யாரும் அச்சப் படத் தேவையில்லை. வியாழனன்று அனைத்து மாநில அரசுகளிடம் உரம் இருப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது” என அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.