முந்தய பக்கம்

பீகாரில் மதிய உணவு உண்ட 70 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

8 Feb 2026, 3:06 pm
பீகாரில் மதிய உணவு உண்ட 70 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு
<p><strong>பீகாரில் மதிய உணவு உண்ட 70 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு</strong></p> <p>பீகார் மாநிலத்தில் பாஜக - ஐக்கிய &nbsp;ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. அம்மாநிலத்தின் &nbsp;சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு நடுநிலைப் பள்ளியில் சனியன்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உணவை உட்கொண்ட சிறிது நேரத்தி லேயே மாணவர்களுக்கு வாந்தி, தலைச் &nbsp;சுற்றல் மற்றும் வயிற்று வலி போன்றவை &nbsp;ஏற்பட்டுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களை, அருகில் உள்ள அரசு &nbsp;மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற னர். பெரும்பாலான மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொட ர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ள னர் என செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram