சென்னை விரைவு செய்திகள்
17 Dec 2025, 4:11 pm

வயிறு உப்புசம், மலச்சிக்கலால் 70 விழுக்காட்டினர் பாதிப்பு

சென்னை,டிச.17- மக்களில் கணிசமானோர் செரிமானப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் தொகையில் சுமார் 70 விழுக்காட்டினர் பேர் அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல் அல்லது செரிமானக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் குறைவான நபர்களே மருத்துவ உதவியை நாடுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்ளுதல், முறையற்ற உணவு நேரங்கள், நாள்பட்ட மன அழுத்தம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் போதுமான தூக்கமின்மை ஆகியவை இந்த கோளாறுகளுக்கு வழிவகுக்கின்றன. இளைஞர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரிடையே குடல் அழற்சி நோய் மற்றும் குடல் செயல்பாட்டில் கோளாறுகள் அதிகரித்து வருகின்றன என்று வடபழனி காவேரி மருத்துவமனையின் இரைப்பைகுடலியல் முதுநிலை நிபுணர் டாக்டர் பாண்டுரங்கன் பாசுமணி கூறினார். கவலை தரும் இந்தப் போக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையில்,செரிமான மண்டல அறிவியல் மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு

சென்னை, டிச.17- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரன் ரூ.400 உயர்ந்து, ரூ.99,200-க்கு விற்பனை யானது. அதேவேளையில், வெள்ளி விலை உச்சம் தொட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.11 உயர்ந்து, ரூ.222 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.11 ஆயிரம் உயர்ந்து, ரூ.2 லட்சத்து 22 ஆயிரமாகவும் இருக்கிறது.

காலமானார்

ராணிப்பேட்டை, டிச.17– சிபிஎம் ராணிப்பேட்டை மாவட்டக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சி. ராதா கிருஷ்ணன் தாயார் குப்பம்மாள் (வயது.86) செவ்வாயன்று (டிச. 16) உடல்நலம் குறைவால் காலமானார். இவருக்கு ஒரு மகன் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். குப்பம்மாள் மறைவிற்கு புதனன்று (டிச. 17) சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரகுபதி, விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ்.கிட்டு, செயலாளர் எல்சி. மணி, விதொச மாவட்ட தலைவர் டி. சந்திரன், ஜி.மதியழகன், முரளிதாஸ், மோகன் ராஜ், வேட்டை சங்க மாநில தலைவர் சேட்டு, குமார், விதொச வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து