தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரதமர் மோடி அவர்களே! மன்னிப்பு கேளுங்கள்! ராஜினாமா செய்யுங்கள்! தில்லி ஜந்தர் போராட்டக் களத்தில் 7 வயது சிறுமி ஆவேசம்

15 Jul 2026, 9:06 pm
பிரதமர் மோடி அவர்களே! மன்னிப்பு கேளுங்கள்! ராஜினாமா செய்யுங்கள்! தில்லி ஜந்தர் போராட்டக் களத்தில் 7 வயது சிறுமி ஆவேசம்

பிரதமர் மோடி அவர்களே! மன்னிப்பு கேளுங்கள்! ராஜினாமா செய்யுங்கள்! தில்லி ஜந்தர் போராட்டக் களத்தில் 7 வயது சிறுமி ஆவேசம்

புதுதில்லி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ள நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வலி யுறுத்தி, பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தில்லி ஜந்தர் மந்தரில் 18ஆவது நாட்களாக தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த போராட்டக் களத்தில் செவ்வாயன்று பங்கேற்ற 7 வயது சிறுமி செய்தியாளர்களிடம் பிரதமர் மோடியை வெளுத்து வாங்கிவிட்டார். ஜந்தர் மந்தர் மேடையில் அபினவ் என்ற செய்தி யாளரிடம், 7 வயது சிறுமி பிராச்சி,”நான் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மே ந்திர பிரதானுக்கு இரண்டு விருப்பங்களை தருகிறேன். இருவரும் மன்னிப்பு கேட்காமல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; அல்லது நீங்கள் ராஜினாமா செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இந்த போராட்ட மேடைக்கு வந்து மாணவர்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் உரக்கக் கூறினார்.

மேலும்,”இந்தக் காலகட்டத்தில் ஏன் இங்கு வந்து போராடுகிறீர்கள்?” என்ற செய்தியாள ரின் கேள்விக்கு பதிலளித்த பிராச்சி,“வினாத் தாள் கசிந்திருக்கிறது, மாணவர்கள் உயிரிழந் துள்ளனர், இப்போது இந்தப் போராட்டங்க ளைக் கலைக்க காவல்துறையினர் பயன்படுத் தப்படுகிறார்கள். அதனால் ஆதரவு தெரிவிக்க இங்கு வந்துள்ளேன். தற்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் சோனம் சாருக்கு உடல்நலம் பெற தனது வாழ்த்துக்கள். சீக்கிரம் குணமடைந்து வாருங்கள் சோனம் சார். ஜூலை 20ஆம் தேதி நாங்கள் உங்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்துவோம்” என துண்டுச் சீட்டு இல்லாமல் ஆவேசமாக பேசினார். சிறுமி பிராச்சி யின் இந்த தைரியமான மற்றும் முதிர்ச்சியான பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.