தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடர் வனப்பகுதியில் சிக்கிய 7 மாணவர்கள் மீட்பு

22 Jan 2026, 2:57 pm
அடர் வனப்பகுதியில் சிக்கிய 7 மாணவர்கள் மீட்பு
<p><strong>அடர் வனப்பகுதியில் சிக்கிய 7 மாணவர்கள் மீட்பு</strong></p> <p>ஈரோடு, ஜன.22- அந்தியூர் அருகே அடர் வனப்பகுதி யில் சிக்கி தவித்த 7 மாணவர்கள், நீண்ட &nbsp;நேர தேடுதலுக்குப்பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலையடிவாரத்தில் காந்தி நகர் அருகே அடர்ந்த வனத் தில் கிணத்தடி சோளகா மலைக்கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் 16 மாணவிகள் உட்பட 39 பேர் தங்கி &nbsp;கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, &nbsp;தங்கியிருந்த கொங்காடை, ஒன்னகரை &nbsp;பகுதியை சேர்ந்த 2 மாணவிகள், 5 மாண வர்கள் புதனன்று காலையில் பள்ளிக்கு &nbsp;செல்லாமல், பின்புறம் உள்ள சுற்றுச் சுவரை தாண்டிக் குதித்து வனப்ப குதிக்குள் சென்றுள்ளனர். வழக்கம் போல விடுதியில் காலை உணவுக்கு &nbsp;மாணவர்களின் வருகைப்பதிவு எடுக்கும் போது, 7 பேரும் மாயமானது தெரியவந் தது. 1 ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறு வன், 4, 6 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மாயமான தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, அந்தியூர் வனத்துறைக்கும், அந்தியூர் மற்றும் வெள்ளித்திருப்பூர் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் &nbsp;மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு கூடு தல் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், காவல் ஆய்வாளர்கள் செந் தில்குமார், ஆனந்தகுமார் மற்றும் அந்தி யூர் வனத் துறையினர், மலைக்கிரா மத்தில் முகாமிட்டு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அருகே உள்ள வனக் &nbsp;கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, மாணவர்களை மீட்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது. இந்நிலையில், பள்ளி யிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவி லுள்ள காக்காயனூர் வனப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த 4 மாணவர்கள் புதனன்று சுமார் 2 மணியளவில் மீட் கப்பட்டனர். இவர்கள், காக்காயனூர் மலைக்கிராமத்திலுள்ள பூமிவீரன் கோவில் திருவிழா விருந்துக்கு செல்ல &nbsp;பள்ளியிலிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து வந்ததாக தெரிவித்துள் ளனர். மேலும், இரு மாணவிகள் மற்றும் 6 வயது மாணவர், வனப்பகுதியில் நடக்க முடியாமல் மெதுவாக வந்து &nbsp;கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து, மீட்கப்பட்ட மாணவர் கள் வந்த வழியாக வனப்பகுதிக்குள் புகுந்த மீட்புக்குழுவினர் தீவிர தேடுத லில் ஈடுபட்டும் மூவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இரவு நேரமான தால் மூவரையும் தேடுவதில் சிரமம் ஏற்படும் என்பதாலும், மாணவர்கள் சென்ற பாதை யானை, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதா லும், வனக்கிராமங்களில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, காக்காயனூர், கிணத்தடி சோளகா, கிழங்கு குழி வனக் கிராமங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் &nbsp;35க்கும் மேற்பட்டோர் உதவியுடன் வன &nbsp;எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், கிணத்தடி &ndash; காக்காயனூர் செல்லும் வனப்பகுதியிலும் 5 தனிப்படை போலீ சார், 3 தனிப்படை வனத்துறையினர் கொண்ட குழுவினர் தீவிர தேடுதல் பணி மேற்கொண்டனர். மேலும், டிரோன் மூல மும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனித்துணை ஆட்சியர் மகேஸ்வரி, பவானி வட்டாட்சியர் சர வணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண் டனர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், காக்காயனூர் மலைப்பகுதியில் பாறை &nbsp;மீது ஏறிக் கொண்டிருந்த மூவரும் புத னன்று மாலை மீட்கப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.