முந்தய பக்கம்

ஆம்புலன்ஸ் விமான விபத்தில் 7 பேர் பலி

24 Feb 2026, 3:55 pm
ஆம்புலன்ஸ் விமான  விபத்தில்  7 பேர் பலி
<p><strong>ஆம்புலன்ஸ் விமான &nbsp;விபத்தில் &nbsp;7 பேர் பலி</strong></p> <p>ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தில்லிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற ஆம்பு லன்ஸ் விமானம், திங்கள்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். &nbsp;ரெட் பேர்ட் ஏர்வேஸ் &nbsp;நிறுவனத்திற்குச் சொந்தமான &lsquo;பீச்கிராப்ட் C90&rsquo; (Beech craft C90) ரக விமானம், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்திலி ருந்து மாலை 7:11 மணிக்கு தில்லி நோக்கிப் புறப்பட்டது. சாத்ரா மாவட்டத்தின் சிம ரியா பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, &nbsp;விழுந்து நொறுங்கியது. இடி யுடன் கூடிய மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ. 8 லட்சம் கடன் இதில் உயிரிழந்த நோயாளி சஞ்சய் குமார், மின்சாரம் பாய்ந்ததில் 60% தீக்காய மடைந்து ராஞ்சியில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை தில்லி க்குக் கொண்டு செல்ல, அவரது குடும்பத்தி னர் உறவினர்களிடம் சுமார் ரூ.8 லட்சம் கடன் வாங்கி இந்த ஆம்புலன்ஸ் விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. &nbsp;மீட்கப்பட்ட 7 பேரின் உடல்களும் சாத்ரா அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக் காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. விபத்து குறித்து விசாரணை நடத்த &lsquo;விமான விபத்து விசாரணை பிரிவு&rsquo; (AAIB) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவிட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram