பாஜகவில் இணைந்த 7 மாநிலங்களவை உறுப்பினர் - மாநிலங்களவை தலைவர் அங்கீகாரம்
27 Apr 2026, 12:47 pm

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கீகரித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த ராகவ் சதா, அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், சந்தீப் பதக், விக்ரம்ஜித் சாஹ்னி, ஸ்வாதி மாலிவால் மற்றும் ராஜிந்தர் குப்தா ஆகிய 7 எம்பிக்கள் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர். இந்த நிலையில், 7 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கீகரித்துள்ளார். இதன்மூலம், மாநிலங்களவையில் பாஜக எம்.பி-க்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் பஞ்சாப்பில் ஒருவரும், தில்லியில் இருவர் என மொத்தம் 3 பேர் மட்டுமே உள்ளனர்.