ஹரியானாவில் 7 தொழிலாளர்கள் பலி
10 Mar 2026, 3:25 pm
<p><strong>ஹரியானாவில் 7 தொழிலாளர்கள் பலி</strong></p>
<p>ஹரியானா மாநிலம் கபாடியாவாஸ் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் 150 ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியது. பணியில் 15 தொழிலாளர்கள் ஈடுபட்ட நிலையில், திடீரென மண் சரிவு ஏற்பட்டது. 15 தொழிலாளர்களும் மண்ணிற்குள் புதைந்தனர். தகவலறிந்த மாநில பேரிடர் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 7 தொழிலாளர்கள் சடலங்களாகவும், 8 தொழிலாளர்கள் உயிருடனும் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 4 தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
