தோழர் பி.சீனிவாசராவ் சிலைக்கு மரியாதை
30 Sept 2026, 9:55 pm
<p><strong>தோழர் பி.சீனிவாசராவ் சிலைக்கு மரியாதை</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற தலைவரும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் விடிவெள்ளியுமான தோழர் பி.சீனிவாசராவ் 65 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினார். விதொச மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை, விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விதொச மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் செவ்வணக்கம் செலுத்தினர்.</p>
