தேனியில் 4 தொகுதிகளில் 65 பேர் போட்டி
10 Apr 2026, 5:30 am

தேனியில் 4 தொகுதிகளில் 65 பேர் போட்டி

தேனி, ஏப்.5- தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் கடந்த 6 ஆம் தேதி வரை நடைபெற்ற மனுதாக்கலில் 123 மனுக்கள் பெறப்பட்டது. பரிசீலனையில் 76 மனுக்கள் ஏற்கப்பட்டு 47 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் வியாழனன்று 11 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்டிபட்டியில் 18 வேட்பாளர்களும், பெரியகுளத்தில் 13 வேட்பாளர்களும், போடியில் 15 வேட்பாளர்களும், கம்பத்தில் 19 வேட்பாளர்களும் என மொத்தம் 65 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர் விபரம் வருமாறு: ஆண்டிபட்டியில் ஆ.மகாராஜன் (திமுக), ஆ. லோகநாதன் (அதிமுக), அ.கோமதி (நாம் தமிழர்), பாண்டி (தவெக); பெரியகுளத்தில் பெ.சரவணகுமார் (விசிக), கே.கதிர்காமு (அதிமுக), ரா.விமலா (நாம் தமிழர்), ஜி.சபரி ஐங்கரன் (தவெக); போடியில் ஓ. பன்னீர்செல்வம் (திமுக), வி.டி.நாராயணசாமி (அதிமுக), எஸ்.பிரகாஷ் (தவெக), சி.கலைவாணி (நாம் தமிழர்); கம்பத்தில் என்.ராமகிருஷ்ணன் (திமுக), எஸ்.டி.கே. ஜக்கையன் (அதிமுக), பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா (தவெக), ஆ.அன்புச்செல்வி (நாம் தமிழர்) ஆகியோர் தேர்தல் களம் காண்கிறார்கள்.