தென்காசியில் 646 மக்கள் குறை குறித்த மனுக்கள் தென்காசி
22 Dec 2025, 2:53 pm
<p><strong>தென்காசியில் 646 மக்கள் குறை குறித்த மனுக்கள் தென்காசி</strong></p>
<p>,டிச. 22- தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் 646 கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உத வித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 646 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். முன்னதாக கால்நடை பராம ரிப்புத்துறை சார்பில் கால்நடை பண்ணைத் தொழில் அமைப்பது குறித்து 20 நாட்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு பெற்ற 23 விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றமைக் கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் , வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ஆ.கோயில்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
