தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அந்த நகருக்கு 60 நாள் சூரிய லீவு

29 Nov 2025, 1:28 pm
அந்த நகருக்கு  60 நாள் சூரிய லீவு

அந்த நகருக்கு  60 நாள் சூரிய லீவு

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள ஒரு நகரத்திற்கு நவம்பர் 18 முதல் சூரியன் டாட்டா காட்டிவிட்டது.  இனி இரண்டு மாதங்களுக்கு அந்நகரத்திற்கு சூரியன் வராது. முழு இரவு மட்டும் தான் இருக்கும். உலகின் பல பகுதிகளில்  காலை நேரம் பறவைகளின் சத்தங்களுக்கு இடையே சூரிய ஒளியுடன் விழிக்கும் நேரத்தில், உட்கியாக்விக் நகரம் மட்டும் முழுவதுமாக இருளில் மூழ்கி இருக்கும்.

அமெரிக்காவின் வடக்கு  திசையில் ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகே அமைந்துள்ள அலாஸ்கா மாகா ணத்தில்  “உட்கியாக்விக்” என்ற  நகரம் உள்ளது.  இந்நகரம் முன்பு “பாரோ” என்று அழைக்கப்பட்டது. இப்போது வருடாந்திர “துருவ இரவு” எனப்படும்  இயற்கை நிகழ்வுக்குள் நுழைந்துள்ளது. இந்த நிகழ்வு  புதிது அல்ல.  ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் அபூர்வ மான வானியல் நிகழ்வாகும்.  அலாஸ்காவின் வட எல்லையிலுள்ள இந்த சிறிய  நகரம், ஆர்க்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்  ளது. சுமார் 5,000 மக்கள் தொகை கொண்ட  இந்த நக ரமானது பூமியின் 71.17 டிகிரி வட அட்சரேகையில் அமைந்துள்ளது. அதாவது ஆர்க்டிக் வட்டத்திற்குப் பல மைல்கள் வடக்கே உள்ளது . இந்த புவியியல் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சூரியன் அடிவானத்திற்குக் கீழேயே நீண்ட  காலம் தங்கும். இதுவே “துருவ இரவு” என அழைக்  கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரிய ஒளி அடி வானத்திற்கும் மேலே  வராது. இது 60 - 65 நாட்கள்  நீடிக்கும். எனினும்  இதே துருவ இரவு காலத்தில் சில  நேரங்களில் மட்டும் அடிவானத்தின் கீழே சற்று ஒளி  பரவுவது போன்ற மங்கலான வெளிச்சம் மட்டும் காணப்படும். நிகழ்வுக்கான காரணம்  இந்த நிகழ்வுக்கான முக்கியக் காரணம் பூமியின்  அச்சு சாய்வு தான். பூமி அதன் அச்சில் சுமார் 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் தன்னைச் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என பள்ளிக்கூடங்களில் படித்து இருப்போம். இந்த அச்சு சாய்ந்து இருப்ப தன் விளைவாகத்தான் ஆண்டின் ஒரு பகுதியில் பூமியின் வட துருவம் சூரியனிலிருந்து விலகி இருக்கும். அந்த நேரத்தில், ஆர்க்டிக் வட்டம் உள்ளிட்ட  வட திசைப் பகுதிகளில் சூரியன் முழுவதுமாக அடி வானத்திற்குக் கீழே இருப்பதால் சூரிய ஒளி கிடைக்காது. இதுவே துருவ இரவு எனப்படும் இயற்கை நிகழ்வு. நள்ளிரவு சூரியன்  இதற்கு நேர்மாறாக, பூமி சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும் காலத்தில் அதே பகுதிகளில் “நள்ளி ரவு சூரியன்” (Midnight Sun) என்ற நிகழ்வு ஏற்படும்.  அதாவது, துருவ இரவில் எப்படி முழு இரவு இருக்கி றதோ அதற்கு நேரெதிராக 80 நாட்களுக்கு 24 மணி  நேரமும் சூரியன்  அடிவானத்திற்கு மேலே தான் இருக்கும். இதன் காரணமாக உலகம் முழுவதும் இரு ளில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது பளிச்சென வீசும் சூரிய வெளிச்சத்தின் கீழே அந்நகர மக்கள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். அங்கு இரவிலும் வெளிச்சம் காணப்படும். இந்த நிகழ்வு  மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை நிகழ்கிறது. துருவ இர வும் நள்ளிரவு சூரியனும் பூமியின் சாய்வால் ஏற்படும்  இயற்கைச் சமநிலையின் இரு நிகழ்வுகள் ஆகும். உட்கியாக்விக் நகரத்தில் துருவ இரவு தொடங்கி யவுடன் நகரில்  உள்ள மக்களின்  வாழ்க்கையும்  மாறு கிறது. துருவ இரவு காலத்தில் வெப்பநிலை மைனஸ்  20 டிகிரிக்கு வரை குறையும். வெளிச்சம் இல்லாத  காரணத்தால் வெளி உலகம் முழுவதும் கருமை யாகக் காணப்படும். இருந்தாலும், அங்குள்ள மக்கள்  இதற்கு பழகியுள்ளனர். நகரில் உள்ள வீடுகள், பள்ளி கள், மருத்துவமனைகள், கடைகள் என அனைத்தும் செயற்கை வெளிச்சத்தின் அடிப்படையில் இயங்கு கின்றன. கடல் உயிரினங்கள், பனிக்கரடிகள், திமிங்க லங்கள் போன்றவை தங்கள் இயல்பான உணவுத் தேடல் மற்றும் இனப்பெருக்க முறைகளை இந்த  இருளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றன. சில உயிரி னங்கள் நீண்ட உறக்க நிலைக்கு செல்வதும் குறிப்பி டத்தக்கது. இந்நிகழ்வைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு  ஆண்டும் விஞ்ஞானிகள், வானியல் ஆராய்ச்சியாளர் கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் அலாஸ்கா வுக்கு வருகை தருகின்றனர். இருளில் ஒளிரும் ஆரோரா போரியாலிஸ் எனப்படும் ஒளிக் காட்சிகளை  காண இது சிறந்த நேரம் எனவும் அவர்கள் கூறு கின்றனர். பச்சை, நீலம், ஊதா நிற ஒளிகளால் வானம்  அலங்கரிக்கப்படும் அந்தத் தருணம் உலகின் அதி சயமான இயற்கை நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.