மாநிலங்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் 6 பேர் போட்டியின்றி தேர்வு!
9 Mar 2026, 9:36 am

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக-வில் இருந்து திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸில் இருந்து கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக-வில் இருந்து எல்.கே.சுதீஷ் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக-வில் இருந்து எம்.தம்பிதுரை, பாமக-வில் இருந்து அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து அதனை திரும்ப பெறுவதற்கான கால அவகாசமும் இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே.சுதீஷ், தம்பிதுரை, அன்புமணி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.